உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

91

அவள் அப்போது தனிமையில் இருந்தாள். ஆகவே, அறிமுகமற்ற இளைஞன் வரவால் அவள் அச்சம் கொண்டாள். ஆனால், இளவரசன் அன்புக் கனிவுடனும், பண்பு நயத்துடனும் நடந்து, அவள் அச்சம் தெளிவித்தான். மாயவிசிறி பற்றிய கதையை, அவன், அவளுக்குப் பக்குவமாக எடுத்துரைத்தபோது, அவள் தன்னையறியாது கைகொட்டிச் சிரித்தாள்.

66

'இதாவரேன்' வேண்டும் என்று நீ தந்தையிடம் கூறினாயே, இஃது எப்படி முடிந்தது?” என்று இளவரசன் கேட்டான். தூதன் வந்த நேரத்தின் சூழல், 'இதாவரேன்' என்று தான் கூற நேர்ந்த குறிப்பு, அதைப் புரிந்து கொள்ளாத தூதன் செயல் ஆகியவற்றை அவள் விளக்கினாள். இவை கேட்டு இளவரசன் விலாப்புடைக்க நகைத்தான்.

இளவரசன் ‘இதாவரே'னுடன் செல்வி செங்கழுநீர் மனம் விட்டுப் பழகி நேசம் கொண்டாள். அவனும் அவளிடமே மாறாப் பாசம் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் புரிவதென உறுதிமொழி பரிமாறிக் கொண்டனர். இரண்டொரு நாள் செங்கழுநீர் மாளிகையில் இன்பமாகப் பொழுது போக்கி இருந்துவிட்டு, 'இதாவரேன்' தன் நாடு சென்றான்.

இதாவரேனின் தாய் தந்தையர்கள் அவன் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இதாவரேன் தன் மண உறுதிப் பற்றியும், செல்வி செங்கழுநீரின் நற்குணம் நிறையழகு பற்றியும் அவர்களுக்குச் சொன்னான். அவர்களும் அவன் விரும்பிய பெண்ணையே மணம் நடத்த இசைவு அளித்தனர். அவர்கள் மண ஒப்பந்தம் காட்டு மாளிகையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக இளவரசன் அங்கே வந்து தங்கியிருந்தான். ஆனால், எதிர்பாராத வகையில் இது தடைப்பட்டது. செல்வி செங்கழுநீர் வாழ்வில் மீண்டும் வெங்காற்று வீசத் தொடங்கிற்று.

செங்கழுநீரின் தமக்கையர்கள் ஏற்கெனவே அவள் செல்வத்தின் மீது இழுக்காறு கொண்டிருந்தார்கள். இளவரசன் இதாவரேன் அவளுக்குக் கணவனாக வாய்த்தது கண்டு, இந்த அழுக்காறு கனலாக வீசிற்று. அவர்கள் அவள் வாழ்வைக் கெடுக்கப் பொல்லாத சூழ்ச்சி ஒன்றை உருவாக்கினர்.