உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அப்பாத்துரையம் - 35

இளவரசன் மணமலர்ப் படுக்கையில் மலர் தூவும் சாக்குடன் அவர்கள், அப் படுக்கையறை சென்றனர். பன்னிற மலர்களுக்கிடையே அவர்கள் பன்னிறக் கண்ணாடித் தூள்களும் கலந்து பரப்பினர். மலருடன் மலராகவும், வண்ணப் பஞ்சுகளுடன் பஞ்சாகவும் அவை விரவிக் கிடந்தன. இளவரசன் உருளும்போது அவன் அறியாமலேயே அவன் உடலில் கண்ணாடித் தூள்கள் உட்சென்று துளைத்தன. காலையில் நோவு பொறுக்காமல் அவன் துடித்தான். அவன் ஒவ்வொரு துடிப்பிலும் செங்கழுநீரும் பதைபதைத்தாள். ஆனால், மருத்துவர் எவ்வளவு முயன்றும் நோவின் காரணத்தை யாரும் அறிய முடியாமல் போயிற்று.

இளவரசனை அவன் தாய் தந்தையர்கள் மாபப்பலாம் நாட்டுக்கே இட்டுச் சென்றனர். அங்கும் நோவு, குணத்துக்கு வரவில்லை; மேன்மேலும் உக்கிரமாயிற்று; செங்கழுநீரையும், அவளைக் கண்ட நாளையும் தாய் தந்தையர் மனப் புழுக்கத்துடன் பழித்தனர். ஏனெனில், அவள் கோள் நிலையே அவன் கோளாற்றுக்குக் காரணம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

தமக்கையர் மணவிழாவுக்கு வைத்த வேட்டு செங்கழுநீர் வாழ்வுக்கே வைத்த உலையாயிற்று. அவள் மாளிகையை வெறுத்து ஒதுக்கினாள். குடும்பத்தை ஒதுக்கினாள். ளவரசனைக் காப்பாற்றி மீட்டு வர முடியுமானால் வருவது, இல்லாவிட்டால், எங்கேனும் திரிந்து உயிர் இழப்பது என்று அவள் தேறினாள்.

செல்வ முற்றிலும் அறச்சாவடிகளுக்கு விட்டு விட்டுப் புறப்பட்டாள். மாற்றுருவில் நாடுநாடாக, காடுகாடாக அலைந்தாள்.

அவள் மெல்லிய காலடிகள் கல்லிலும் முள்ளிலும் அலைந்துகொப்புளம் கண்டன.அவள் முகம் வாட்டம் அடைந்தது. மாற்றுருவில் அணிந்திருந்த ஆடைகள்கூடக் கந்தலாயின. உடல் நலிந்து மெலிந்தது. இந்நிலையிலே அவள் ஒருநாள் காட்டிலுள்ள ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறினாள். அதன் மூட்டில் சாய்ந்து அவள் கண்ணயர்ந்தாள்.

அந்த மரத்தில் நேமிப் பறவை எனப்படும் ஆனைக்குருகுகள் கூடுகட்டி வாழ்ந்தன. அவை மண்டலப் பறவைகள். ஆறாண்டுகள்