உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அப்பாத்துரையம் - 35

பெண்ணென்று கண்டு கொண்டன. “அம்மணி, உங்களுக்கு நாங்கள் எத்தகைய உதவியும் செய்வோம். உங்கள் குறை எதுவானாலும் கூறுக" என்றன.

தான்

இளவரசி தன்னை மணக்க இருந்த மணாளனுக்கு நேர்ந்த டரையும், அதனால், விரித்துரைத்தாள். நேமிப்புள் இரங்கிற்று.

66

அடையும்

துயரையும்

“அழகிளஞ் செல்வியே! இஃது ஒரு பெரிய காரியமன்று; ளவரசனுக்கு நோய் ஒன்றுமில்லை; அவன் படுக்கையில் யாரோ கண்ணாடித் தூள்களைத் தூவியிருக்கிறார்கள்! அது மயிர்க்கால்தோறும் துளைத்து வருத்துகிறது. அதற்கான மருந்து எங்கள் எச்சம் தான். நீ இரவு தோறும் அதைத் திரட்டி வைத்துக்கொள். உன்னை நாங்களே விரைவில் இளவரசன் நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம். அதன்பின் ஈரேழு குடம் பால், ஈரேழுகுடம் பன்னீர், ஈரேழு குடம் நன்னீர் தருவியுங்கள். ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுடம் நன்னீரில் ளவரசனைக் குளிப்பாட்டுங்கள். பின், அவர் உடலுக்கு எங்கள் எச்சத்தை ஓர் இரவு தடவி வெறுங் கட்டிலில் படுக்க வையுங்கள். மறுநாள் மீந்த ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுட நன்னீரில் குளிக்கட்டும். நோவு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அத்துடன் உடம்பும் மாறா நீள் இளமைப் பொலிவு அடையும். ஏற்கனெவே நாங்கள், எங்களின் அமுத உணவு அளித்திருக்கிறோம். ஆகவே, நீயும் மாறா நீள் இளமை பெற்றிருக்கிறாய். இருவரும் மகிழ்ந்து வாழ்வீர்களாக” என்று நேமிப்புள் கூறிற்று.

செங்கழுநீர் அவ்வண்ணமே செய்தாள். மூன்று இரவுகளில் அவள் அவற்றின் எச்சத்தைத் திரட்டிப் பெருமூட்டைகளாகக் கட்டினாள். பறவைகளில் ஒன்றின் முதுகில் மூட்டைகளைச் சேணம்போலக் கூட்டினாள். மற்றொன்றில் தான் ஏறி அமர்ந்தாள். இரு நொடியில் பறவைகள் அவளை மாபப்பலாம் நாட்டின் தலைநகரில் கொண்டு சேர்த்தன.

செங்கழுநீர் ஒரு மருத்துவர் வேடத்துடன் அரண்மனை சென்றாள். இளவரசன் அச்சமயம் கிட்டத்தட்டச் சாகும் நிலையிலேயே இருந்தான்.ஆனால், செங்கழுநீர் அந்நொடியிலேயே