உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

95

ஈரேழு குடம் பால், ஈரேழு குடம் பன்னீர், ஈரேழு குடம் நன்னீர் தருவித்தாள். ஓரேழில் அவனை முழுக்காட்டினாள். வெறும் படுக்கையில் கிடத்தி இரவு முழுவதும் காவலிருந்தாள்.

இளவரசன் நோவால் உருண்டு புரண்டு துடித்தான். அவள் மனம் கவலைப்பட்டுக் கலங்கிற்று. ஆனால் கண்ணாடித் துகள் சென்ற இடமெல்லாம் எச்சம் உள் சென்றது. அது கண்ணாடித்துகளைக் கரைத்து அமுதமாக்கிற்று. காலையில் அவன் நோவகன்று எழுந்தான். செங்கழுநீரைக் கண்டு அடையாளம் அறியாமல் அவன் மிரண்டான். ஆனால், செங்கழுநீர் அவனை மீட்டும் படுக்க வைத்தாள். "நோய் முற்றும் முடியவில்லை. இளவரசே! இன்னும் சற்றுப் பொறுத்திருங்கள்' என்றாள். மீட்டும் ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுடம் நன்னீர் ஆகியவற்றில் அவள் அவனை நீராட்டினாள். அவன் அதன்பின் ஒரு பகலும் இரவும் நற்படுக்கையில் துயின்று முழுநலம் பெற்றான்.

""

செல்வி இளவரசனுக்குத் தான் யார் என்பதைக் கூறவில்லை. கூறாமலே மெல்லமெல்லச் செல்வி இளவரசனுக்கு அவன் நோவு கொண்ட வகையை விளக்கினாள்.

இளவரசனுக்குச் செங்கழுநீர் பற்றிய கவலை மீண்டும் எழுந்தது. அவள் தமக்கையர் மீது சினமும் எழுந்தது. செங்கழுநீர் முன்னிற்பதை, அவன் அறியவில்லை. அவளைத் தேட புறப்பட்டான். அதன்பின்னரே செங்கழுநீர், தான் பயார் என்பதை வெளியிட்டாள்.

அவன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவள், அவனைத் தேடியலைந்த கதை, அருமருந்து கண்ட கதை கேட்டு, அவன் உள்ளம் பாகாய் உருகிற்று.

ளவரசனைச் செங்கழுநீர் முறைப்படி மணந்து கொண்டாள். விரைவில் அவளும் இளவரசனும் மாபப்பாலம் நாட்டு அரசு கட்டிலேறினர். தாய்தந்தையரை அவர்கள் வரவழைத்துச் சிறப்புச் செய்தனர். ஆனால், செங்கழுநீர் வேண்டுகோளின்படி, இளவரசன், அவர்களுக்கு அவள் தமக்கையர் செய்த கொடுமை பற்றி எதுவும் கூறவில்லை. அவர்களுக்குச் சிறந்த பரிசுகளை அனுப்பிக் கொடுத்தான். அஃது