உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அப்பாத்துரையம் - 35

அவர்கள் உள்ளத்தைச் சுட்டது. அவர்கள் தாமாக உண்மையை உரைத்துத் தாய் தந்தையரிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினர்.

செம்மேனி, மெய்ம்மை பொய்ம்மைகளின் தலைமாறிய போக்குக் கண்டு, அதன் மாயைக்குக் காரணமான தன் செல்வ வாழ்வையே வெறுத்தான். செங்கழுநீருக்கு வாழ்வளித்த மரம், குளம், மாளிகை ஆகியவற்றை ஒரு கோயிலாகவும், அறச்சாலையாகவும் மாற்றி, அங்கே அறத் தொண்டாற்றி நாட்கழித்தான்.

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு”

(குறள்.98)