உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அப்பாத்துரையம் - 35

புதிய தலைவன் இச்சமயம் ஒரு புதிய மாளிகை கட்டத் திட்டமிட்டான். அவன் பேய் பூதங்களில் நம்பிக்கையற்றவன். னால், அவன் புதிய மாளிகைகட்ட எண்ணிய தோட்ட வெளியில் வேலையாட்கள் கால்வைக்க மறுத்தனர். குறிப்பாக, அத்தோட்டத்து நடுவேயுள்ள புங்க மரத்தில் எண்ணற்ற பேய்கள் தங்கியிருந்தன. மக்கள் அதனருகே மாலை நேரத்தில் போக அஞ்சினார்கள். அறியாமல் அத்திசை சென்றவர்களின் தலைகள் காலையில் மரத்தடியில் திருகப்பட்டுக் கிடந்தன.

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அச்சம் ஒரு பெரிய பகைப்பண்பு என்று தலைவன் கருதினான். அதை வெல்லும் பண்பு ஆசை ஒன்றுதான் எனவும் அவன் முடிவு கட்டினான். பண ஆசையைத் தூண்டி, பேய் அச்சத்தை ஒழிக்க அவன் திட்டமிட்டான். "இரவுக்காலத்தில் புங்க மரத்தடி சென்று அதன் கொப்பு ஒன்றை முறித்துக் கொண்டு வருபவர்களுக்கு, ஆறு வேலி வரியிலி நிலம் தருவேன்" என்று அவன் பறைசாற்றுவித்தான்.

பண ஆசைகூட மக்கள் அச்சத்தை அசைக்கவில்லை. "பணம் வருகிறது என்று போய் என்ன பயன்? அதை நுகர ஆள் திரும்பி வந்தால்தானே!" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். தலைவன் விளம்பரம் சிலநாள் முற்றிலும் பயனற்றதாகவே இருந்தது.

சா வச்சத்தைப் பண ஆசை வெல்லவில்லை; ஆனால், வறுமை அதை வென்றது. "பட்டினி கிடந்து சாவதைவிட, பேய் கொன்று சாவது சாவது மோசமல்ல; ஆறுவேலி ஆசையோ சாவுக்குக்கூட இனிமை ஊட்டத்தக்கதே" என்று பழனக் கிழான் எண்ணினான். அவன் தலைவனிடம் சென்றான்.

“என் வறுமை தீர்க்க, புங்கமரத்தின் பக்கம் இன்றிரவு செல்கிறேன். அதன் கிளையை முறித்துக் கொண்டு வருகிறேன். பேயிடமிருந்து தப்பி வந்தால், விளம்பரப்படுத்தியபடி ஆறுவேலி தருவது உறுதி தானே!” என்றான்.

66

பொதுநிலத்தில்

ஆகா, நல்ல நிலமாக நீயே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்” என்றான் தலைவன்.

ஒட்டிய வயிற்றைப் பழனக்கிழான்மேலும் ஒட்ட இறுக்கிக் கொண்டான். மாலை கழிந்ததும் தோட்ட வெளியை