உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

[209

விலங்குகளுடன் விலங்காக, உடன்பிறப்புப் பாசம் காட்டிக் கொண்டே காம்போதி அன்பாட்சி செய்தது. அதே சமயம் அது தன் அறிவையோ, ஆற்றலையோ தனக்குச் சிறிதும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது காட்டான் என்ற விறகு வெட்டியிடமிருந்து அவனுக்கு அடங்கி ஒடுங்கிக் குற்றவேல் செய்து வந்தது.

காட்டான் சில சமயம் காம்போதியை அடிப்பான்; சில சமயம் அதைக் கட்டி முத்தமிடுவான்; கழுதை இரண்டையும் சட்டைபண்ணுவதில்லை. அவன் சில சமயம் அதைக் கடுமையாக வேலை வாங்குவான்; சில சமயம் துனியை வலுக்கட்டாயமாக அதன் தொண்டைக்குள் Fணிப்பான். காம்போதி அந்தந்தச் சமயத்துக்கேற்றபடி நடந்து தன் கடமையைச் செய்து வந்தது. அறிவிலோ, ஆற்றலிலோ காட்டான் தனக்கு ஈடல்லன் என்பது காம்போதிக்குத் தெரியும். ஆயினும் அதற்கு அவனிடம் உள்ளார்ந்த அன்பும் மதிப்பும் உண்டு. ஏனெனில் அவன் சூதுவாதற்ற குழந்தை உள்ளமும் அன்புக் கனிவும் உடையவன்.

சில சமயம் விறகுகட்டுப் பெரிதாயிருப்பது கண்டு, காம்போதி சிறிது முனகும். காட்டான் உடனே பெருந்தன்மை யுடன் விறகுக்கட்டை அதன் முதுகிலிருந்து தன் தலைக்கு மாற்றிக் கொண்டு, தான் காம்போதியின் முதுகிலேயே ஏறி உட்கார்ந்து கொள்வான். அத்துடன் “நீ என்னைச் சுமந்து சென்றால் போதும். நான் விறகுகட்டைச் சுமந்து வருகிறேன்." என்று அவன் கழுதையிடம் பேரம்பேசி அதைத் தட்டிக் கொடுப்பான். இச்செயலால் விறகுச்சுமையும் தன் சுமையும் காம்போதிமீதே அழுத்துகிறது என்பதை அவன் மூளை அறிவதில்லை. இச்சமயங்களில் காம்போதி, அவன் வெள்ளை உள்ளத்தை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டே, அவன் மனம் நோகாமல் இரட்டிப்புச் சுமையைச் சுமந்து செல்லும். பாவம், மனிதன்! கழுதைக்குள்ளஅறிவுதான் இல்லை; அன்புமட்டும் இருக்கிறது என்று அது பெருமிதத்துடன் தனக்குள் பேசி அமையும்.

வாய்விடா விலங்குகளுக்குக் காம்போதி ஒரு கண் கண்ட தெய்வம். போக்கற்ற எத்தனையோ உயிர்களுக்கு அது போக்களித்திருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாய் வந்த எத்தனையோ விலங்குகளுக்கு அது கண்ணீர் துடைத்திருந்தது.