உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

(211

உடல்தேறியபின் குரங்கு காடுகளில் சென்று காய்கறிகள் கொண்டு வந்து காட்டான் மனைவிக்குக் கொடுத்தது. காம்போதியின் சமூகப் பணியாற்றியது. அது முதல் காட்டான் மனைவி முணுமுணுப்பதில்லை. அவளும் அதில் மனமுவந்து பங்குகொள்ளத் தொடங்கினாள்.

காட்டான் மனைவியின் மனமாறுதலால் அவன் வீடு ஒரு சிறிய விலங்குப் பண்ணையாகவே விளங்கிற்று. வல்லூறுகளின் பிடியிலிருந்து தப்பி விழுந்த கோழிக் குஞ்சுகள், துரத்திக் கொண்டு வரும் ஓநாய்க்குப் பயந்து ஊருக்குள் நுழைந்து விட்ட காட்டு மாடுகள், சிறகறுபட்ட பறவைகள், பால்வற்றிப்போன பசுக்கள் ஆகியவை அங்கே வந்து அடைக்கலம் பெற்றன. ஒரு விலங்கு, மற்ற விலங்குகளுக்கு உதவி செய்ததாலும், எல்லா விலங்கு களுமே வீட்டுத் தலைவிக்கு ஏதாவது ஒத்தாசை செய்து வந்ததாலும், மொத்தத்தில் காட்டான் மனைவிக்கு இப் பண்ணையின் பொறுப்பால் துன்பம் எதுவுமில்லை! இன்பமே மிகுதியாயிற்று. கோழிப்பண்ணை, பால் பண்ணை பெருகி விட்டதால், இனி கணவனும் காம்போதியும் மிகுதிவேலை செய்யவேண்டியதில்லை என்றுகூட அவள் கருதிவிட்டாள்.

வேலையில்லாத நாட்களில், காம்போதி பகலிலேயே ஊரைச் சுற்றிச் சென்று மற்ற உயிரினங்களின் சேமநலங்களைப் பற்றி உசாவி வரும். வேலை மிகுந்த நாட்களில், இரவிலேயே ஊர் சுற்றிவரப் புறப்படும். இரவு ஊர்வலம் வருவதால் அதன் சமூக சேவை இன்னும் பயனுடையதாயிற்று. கோழிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் பதுங்கி இருந்து திருட எண்ணும் நரிகளை, அது அவ்வப்போது கண்டது. அச்சமயம் அது தன் கழுத்தை நீட்டி முழக்கமிடும் அந்த முழக்கத்தைக்கேட்டே நரிகள் ஓட்டம் பிடிக்கும்.

இங்ஙனம் முழக்கமிடும் வேளையில், அதற்கு இன்னொரு புதிய அனுபவமும் ஏற்பட்டது. முழக்கமிடும் வகையில் கழுதை இனத்துக்கு உள்ள ன ஒற்றுமைப் பண்பை அது அப்போதுதான் முதன் முதலாகக் கண்டது. தான் முழக்கமிடும் சமயத்தில், அண்டை அயலிலுள்ள எல்லாக் கழுதைகளும், தூங்கிக் கொண்டிருந்தால்கூட எழுந்து முழக்கமிடுவதை அது