உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(212) || _

அப்பாத்துரையம் - 35

கண்டது. கழுதையினத்தில் தான் பிறந்ததற்காக அது அத்தகைய தறுவாய்களில் உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொண்டது.

கழுதைகளின் கூட்டு முழுக்கத்தையும் அதனையடுத்து ஒன்றுபட்ட முழக்கத்தையும் தூண்டி, ஓநாய் புலி ஆகியவற்றைக்கூடத் துரத்த முடியும் என்று காம்போதி கண்டது.

நாய்கள், கோழிகள் ஆகியவைகளின்

ஒரு தடவை பள்ளத்தில் பதுங்கியிருந்த ஒரு புலி மீது காம்போதி அச்சமில்லாமல் உயரத்திலிருந்து தாவிக் குதித்தது; அதிர்ச்சிகொண்ட புலி ஓடிற்று; ஆனால், காம்போதியின் உடல் பளுவுடன் அதன் கால் குளும்புகளும், விழுந்த வேகமும் சேர்ந்து புலியை மிகவும் காயப்படுத்தியிருந்தது. விழுந்தவுடன் அது கடித்த கடியால் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. இக்காயங்களால் சிறிது தொலை ஓடுவதற்குள் புலி சோர்ந்து விழுந்து செத்தது.

வேட்டை நாய்கள்கூட எதிர்க்க அஞ்சும் புலியைக் காம்போதி தனியாய் நின்று வென்றதைக் கண்டதே, அதன் பெருமை விலங்குலகில் மட்டுமன்றி, மனித உலகில்கூடப் பெரிதாயிற்று. காம்போதி இருந்த ஊரில் பாதுகாப்பு மிகுந்த தனால், அங்கே விலங்குகளும் பெருகின; பயிர்ப் பச்சைகளும் வளமாயின; செல்வமும் பெருகிற்று; காம்போதி விலங்கு களாலும் மனிதராலும் நன்கு மதித்துப் பூசிக்கப்பட்ட ஓர் உண்மைத் தெய்வமேயாயிற்று.

உண்டு

விலங்குகளின் புகழோ, புகழோ, மனிதரின் மனிதரின் பாராட்டோ, காம்போதியின் போக்கில் எந்த மாறுதலும் பண்ணவில்லை. காட்டானுக்கு அதனிடம் அன்புமட்டுமல்ல, மதிப்பும் வளர்ந்தது. ஆனால் காம்போதி, அவன் மதிப்பைக் கண்டு புன்முறுவல் செய்ததேயன்றி, வேறெந்த வகையிலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தன்னாலியன்ற அளவு அது முன்போலவே வேலை செய்தது.

அதற்கு இருந்த பெருமை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். புலியைக்கூடத் தாக்கும் வீரமும் பலமும் தன் முரட்டு எலும்புகளுக்குள் இருந்தன என்பதே அது. ஆனால் இந்தப் பெருமை அதை மேன்மேலும் வீரப் பணிகளுக்கும் அஞ்சாத் துணிகரச் செயல்களுக்கும் மட்டுமே தூண்டிற்று.