உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

213

ஒருநாள் காலையில் காட்டான், காம்போதிக்கு உலர்ந்த புல்லைக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து வைத்தான். வழக்கத்துக்கு மாறாக, காம்போதி புல்லையே கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.

அதன் தலை சாய்ந்திருந்தது. நீண்டகன்ற கண்களிலிருந்து ஒன்றிரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தி, அதன் கன்னத்தின் மென் மயிர்களை நனைத்திருந்தது.

தன் ஆருயிர்க் கழுதையின் கவலைகண்ட காட்டான் உள்ளம் திடுக்கிட்டது. “என் அருமைக் காம்பூ, நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்? என்னிடம் உனக்கு ஏதேனும், குறை ஏற்பட்டுவிட்டதா? வேலை கடுமையாய் இரக்கிறதா? என்ன குறை இருந்தாலும் சொல்; நான் தீர்த்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்.” என்றான்.

காட்டானின் அன்பு ததும்பும் சொற்கேட்டுக் காம்போதி தன் கண்ணீரைச் சட்டெனத் துடைத்துக் கொண்டது.

66

'அன்பரே! நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும்? உங்கள் தயவால் நான் இந்த வீட்டில் மட்டுமின்றி, இந்த ஊரிலேயே அரசன்போல வாழ்கிறேனே! ஆனால், நான் கவலைப்பட்டது எனக்காக அல்ல. இந்த ஊரிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் இப்போது எல்லை யில்லாத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது.”

"நம் பூனையின் அத்தை மகனை முந்தாநாளிலிருந்து காணவில்லை. பூனை அதுமுதல் சரியாகச் சாப்பிடவில்லை. நம் குரங்கின் அண்ணன் பிள்ளையின் கழுத்தை முறித்துக் குருதி குடித்து விட்டு யாரோ உடலை வீசி எறிந்திருக்கிறார்கள். அதன் தாய் குட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து என்முன் அழுதது. இவை மட்டுமல்ல. நாய்கள், ஆட்டுக் குட்டிகள், கன்று குட்டிகளைக் கூட இரவில் யாரோ தின்று அழிக்கிறதாகத் தெரிகிறது.”

"நான் இரவில் சென்று உசாவியதில் ஒரு கொடிய கூளிப் பேய் உலவுகிறதாம்! கழுதைகளும், எருமைகளும்கூட அதை எண்ணி இரவில் நடமாட அஞ்சி நடுங்குகின்றன. விலங்கினங்கள் இவ்வளவு துன்பம் அடைவதைப் பார்த்துக் கொண்டு நான்