உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(214) ||-

அப்பாத்துரையம் - 35

மட்டும் உங்கள் ஆதரவில் எப்படி மகிழ்ச்சியோடிருக்க முடியும்?” என்று காம்போதி கூறிற்று.

காட்டான் இதைக் கேட்டுக் கலகலவென்று சிரித்தான்.

"இத்தனை விலங்குகளுக்கும் அவற்றை வைத்துக் காக்கும் மனிதர்களுக்கும் இல்லாத கவலை உனக்கு ஏன் காம்பூ! உனக்குத் துன்பம் வராதவரை நீ பேசாமலிரு,” என்றான்.

காட்டானின் சிரிப்பும் அவன் குறுகிய தன்னலமும் காம்போதியின் ஆத்திரத்தைக் கிளப்பின. அது வாலை உயர்த்திக் கொண்டு பின்னங் கால்களை ஊன்றி மனிதனைப் போல நின்று கொண்டு “மனிதர்கள் அடிக்கடி கூறுகிறபடி நான் ஒரு மடக்கழுதையா யிருக்கலாம்; ஐயனே! சுமை தூக்குவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாதவனாயிருக்கலாம்; ஆனால், என் இனத்தவர் இடர்ப்படும்போது, அவர்களுக்கு உதவுவதற்கு வேண்டிய உறுதியையும் வலுவையும் என் எலும்புகளுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார்." என்று இறுமாப்புடன் கூறிற்று.

விறகுவெட்டியின் சிரிப்பு அமர்ந்த புன்முறுவலாக மாறிற்று. "காம்பூ, உன்னை மடக்கழுதை என்று யாரும் கருதவில்லை; உன் அறிவு, வீரம், பெருந்தன்மை ஆகியவைகளை நான் அறிவேன்; ஆயினும், இதில் நீ தலையிட்டால் உனக்குக் கேடு வந்துவிடுமே என்றுதான் அஞ்சுகிறேன். நீ இரவில் வெளியே போனால் அந்தப் பாழும் கூளி உன்னை விழுங்கிவிடக் கூடும்” என்றான்.

66

என்னையா? விழுங்கவா? அந்த அச்சம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மொழியில் நீங்கள், கூளியைக் கழுது இனம் என்கிறீர்கள். என் இனத்தைக் கழுதைஇனம் என்கிறீர்கள். கழுதுகளை விழுங்கி ஏப்பமிடும் கழுதை இனம் நான் என்று காட்டுகிறேன்." என்றது காம்போதி.

காம்போதியின் சொல்லுக்கு மாறு சொல்லி அதைப் புண்படுத்தக் காட்டான் விரும்பவில்லை. அதே சமயம் காம்போதியை இந்த இடருக்குள் சிக்க வைக்கவும் அவன் எண்ணவில்லை.ஆகவே, “கழுதுக் கூளியை ஓட்டநான் வேண்டிய ஏற்பாடு செய்கிறேன். நீ அதுவரையில் சும்மா இரு,” என்று கூறிச் சென்றான்.