உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

215

அன்று நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் காட்டான் கழுகுக்கூளி பற்றிய பேச்சேடுத்தான். எல்லாரும் உடனே தங்கள் தங்கள் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டார்கள். கழுதின் நினைவு வந்ததே, பொழுது சாயுமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்ற எண்ணந்தான் எல்லாருக்கும் ஏற்பட்டது.நிறைவேறிய தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் அமைந்திருந்தது. “ஊர்க் கூட்டங்கள் இனி நடு உச்சியிலேயே நடைபெற வேண்டும். பொழுது சாய்வதற்கு முன்பே எல்லோரும் வீட்டுக் கதவுகளையும் பலகணிகளையும் இறுக மூடிவிட வேண்டும்.எல்லாக் கதவுகளுக்கும் பலகணிகளுக்கும் ஊர்க் கொல்லர் உறுதியான பூட்டும் தாழ்ப்பாளும் செய்து கொடுக்க வேண்டும்” -இவையே மனித உலகின் தீர்மானங்கள். வீட்டு முற்றத்தில் கட்டப்படும் ஆடு மாடுகள், கோழிகள் ஆகியவற்றைப் பற்றியோ, இரவில் வெளியே திரியும் பூனை, நாய்களைப் பற்றியோ இந்த உயிராபத்தான காரியத்தில் எவரும் கவலை செலுத்தவில்லை.

காம்போதிக்குள்ள

வீரமும்

பெருந்தன்மையும் அன்புள்ளமும் மனித உலகத்தில் மிகமிக அருமையானதே என்று காட்டான் கண்டான். இதைக் காம்போதியிடம் கூறவும் அவனுக்கு வெட்கமாயிருந்தது. ஆகவே, காம்போதியை மட்டும் பின் தொழுவத்திலிராமல் முற்றத்தில் வெளியறைக்கு வந்து விடும்படி அவன் கூறினான்.

காற்று வீசும் வீச்சைக் காம்போதி அறியாமலில்லை. தன் தலைவன் மனம் குளிர, அறையிலேயே படுத்துக் கொள்வதாக அது கூறிற்று. ஆனால் காட்டான் மனைவி கதவுகளைச் சார்த்து முன்பே அது யாரும் காணாமல் பின் தொழுவத்துக்குள் சென்று படுத்துக் கொண்டது. இது அவ் வீட்டிலேயே இருந்த பூனை, குரங்கு முதலிய உயிர்களுக்குச் சிறிது தெம்பளித்தது. ஆனால், தன் தோழர்களுள் கடைசியான தோழன் உறங்குவதற்குள் அது வெளியே வந்து விடும். "வெளியே நான் காவலிருக் கிறேன். நீ உள்ளே கதவை அடைத்துக்கொள்,” என்று கடைசித் தோழருக்கு அது ஆணையிடும்.

வீட்டைக் காப்பதுடன் நில்லாது, அது நள்ளிரவிலேயே ஊர் சுற்றத் தொடங்கிற்று.