உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(216

அப்பாத்துரையம் - 35

கூளியைக் கண்டு மருண்டோடும் விலங்குகளிடம் அது கூளி எங்கே என்று கேட்டது. இதனால் அவற்றின் அச்சம் குறைந்தது. ஆனால், கூளி எங்கே தம் அருமைக் காவலனை விழுங்கி விடுமோ என்று அவை கவலைப்பட்டன.

சிறப்பாகக் கழுதைகள் தம் இனத்தில் தலைசிறந்த வீர அறிஞனுக்குத் தீங்கு வரக்கூடாதே என்று அதன்மீது அக்கரையாயிருந்தன. குரங்கொன்று ஒரு மரத்தண்டை பதுங்கியிருந்தது. “உனக்குக் கூளியிடம் அச்சம் இல்லையா?” என்று காம்போதி அதைக் கேட்டது. கூளி என்றவுடன் அது உண்மையிலேயே நடுங்கிற்று. என்னை எங்காவது பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் விடு, காம்போதியண்ணா! உனக்குக் கோடி புண்ணியம் உண்டு”. என்று குரங்கு கெஞ்சிற்று. காண்டு போய் விடுகிறேன், ஆனால், இவ்வளவு அஞ்சுகிற நீ இங்கே இப்படி ஏன் இந்நேரம் வந்தாய்?” என்று காம்போதி கேட்டது.

66

குரங்கு வெட்கத்தால் தலை குனிந்தது. குனிந்தது. "கோபம் கொள்ளாதே அண்ணா; இங்கே மரத்தின் மேல் ஒரு தேன் கூடு இருக்கிறது. பகலில் அதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டேன். ஆனால், தேனீக்கள் கொட்டி விடுமென்று கிட்டப் போகவில்லை. இரவில் தேனீக்கள் தூங்கும் சமயம் கோலால் அதைக் குத்தி, வடியும் தேனைக் குடிக்க எண்ணி வந்து விட்டேன்,” என்றது.

காம்போதி குரங்கைத் தன் வீட்டண்டையே கொண்டு சேர்த்தது. கழுதுக் கூளியை வெல்வதற்கான வழிதுறைகளை எண்ணிக் கொண்டே அது மீண்டும் தேன்கூடு இருந்த மரத்தை நோக்கி வந்தது. அதன் மூளையில் பல எண்ணங்கள் தோற்றின.

அதே தேன்கூட்டருகில் வேறொரு மரத்தடியில் ஒரு நாயைக் கொன்று தின்று கொண்டிருந்தது ஒரு கூனல் உருவம். அது நிமிர்ந்தபோது, அதுதான் கூளி என்று காம்போதி ஊகித்தது.

“என்ன கூளி மாப்பிள்ளை? இருந்திருந்து நாயைத் தின்னத் தொடங்கிவிட்டாய் போலிருக்கிறது,” என்று கேலி பேசிற்று காம்போதி.