உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

[217

கழுதுக்கூளிக்கு வந்த கோபத்துக்கு எல்லையில்லை. "வா, வா, நான் உனக்கு மாப்பிள்ளையா? வா; நான் இனி நாயைத் தின்னப் போவதில்லை; அதைவிட நீ நல்ல உணவு; உன்னையே தின்னப்போகிறேன்." என்று எழுந்து தன் பேய்த்தன்மையைக் காட்டும் முறையில் ஊளையிட்டது.

கழுதின் ஊளை பயங்கரமாகவே இருந்தது. ஆனால், காம்போதி அஞ்சவில்லை. “ஐந்திலும் சாவுதான், ஐம்பதிலும் சாவுதான்; ஆகவே, அதற்காக அஞ்சி அஞ்சிச் சாகவேண்டிய தில்லை.” என்று அது துணிந்தது. அது தன் இரு முன்கால் களையும் நீட்டிக் கொண்டு பின்கால்களில் எழுந்து நின்று தன் முழு வலிமையையும் காட்டி முழங்கிற்று.

அதன் முழக்கத்துடன் முழக்கமாக எல்லாக் கழுதை இனமும் முழங்கிற்று.

பேய்கள், கழுதுகளின் உலகில்கூடக் கூளி இத்தகைய பயங்கர முழக்கத்தைக் கேட்டதில்லை. அது உள்ளூர நடுங்கிற்று. ஆயினும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அது கையை ஓங்கிக் காம்போதியின் முகத்தை நோக்கி ஓரடி அடித்தது.

காம்போதி உடனே தலையைத் தாழ்த்திக்கொண்டு அடியை விலக்கிற்று; பின், முன்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு அதன் மீது பாய்ந்தது; காம்போதியின் பளுவும் பாய்ச்சலும் குளம்புகளும் சேர்ந்து கூளியைப் பின்னுக்குத் தள்ளிற்று.

காம்போதியை முன்னால் நின்று கொல்ல முடியாது என்று நினைத்துக் கூளி வளைந்து சென்று பின்புறம் தாக்கத் தொடங்கிற்று.

பாவம், கழுதையினத்தின் வல்லமை அதன் பின் கால்களில்தான் இருக்கிறது என்பதைக் கழுது அன்று வரை அறியவில்லை.

கூளிப்பயல் சரியாக மாட்டிக் கொண்டான் என்று தனக்குள் நகைத்த வண்ணம், காம்போதி தன் முன்கால்களை நிலத்தில் ஊன்றிப் பின் கால்களால் வேகமாக உதைத்தது.