உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(218)

அப்பாத்துரையம் - 35

கூளியின் முகத்தில் பின்குளம்பு பட்ட

டமெல்லாம்

குருதிச் சேறாயிற்று. போதாக்குறைக்குக் குளம்புகள் கல்லையும் மண்ணையும் வீசியதனால் அதற்குக் கண் திறக்க முடியாமல் ஆய்விட்டது. இனி தப்பியோடிப் பிழைத்தால் போதும் என்று அது சரசரவென்று தேன் கூடு இருந்த மரத்தில் சென்று ஏறிப் பதுங்கிக்கொண்டது.

கம்போதிக்கு இப்போது தன் தாக்குதல் திட்டத்தின் கடைசிப்படி நினைவுக்கு வந்தது. அது பின்வாங்குவது போல் சிறிது தொலைசென்று, பின்கால்களால் மரத்தின் மேல் கல்லையும் மண்ணையும் வாரி இறைத்தது.

ஏற்கெனவே கழுதைகளின் முழக்கத்தால் தேனீக்கள் கலைந் திருந்தன. கல்லும் மண்ணும் கூட்டின் மீது வீழவே அவை நாற்புறமும் பறந்து வந்து கண்ட கண்டவற்றையெல்லாம் கொடுக்குகளால் கடித்தன. காம்போதி தொலைவில் சென்றிருந்ததால், மரத்தின் மேலிருந்த கழுதின் மீதே அவற்றின் வேகம் முழுதும் சென்றன.

தேனீக்கள் கொட்டிக் கழுதின் கண்ணும் காதும் முகமும் வீங்கின. அது தொப்பென்று கீழே விழுந்து உருண்டது.

காம்போதி அப்போதும் அதை விடாமல் உருட்டிச் சென்று சிறிது தொலைவில் வைத்துக் காற்குளம்புகளை அதன் மீது ஏவித் தாக்கத் தொடங்கிற்று.

கூளி இரு கைகளையும் கூப்பி, "மாமா, மாமா? என்னை விட்டு விடுங்கள். இனி இந்த ஊர்ப்பக்கமே வரமாட்டேன். போய்விடுகிறேன்.” என்றது.

காம்போதி அப்போதும் அதை விடவில்லை.

"இந்த ஊருக்கு எந்தக் கூளியும் வராமல் காத்துக் கொள்கிறேன்; அத்துடன் ஆண்டுதோறும் நூறுகலம் எள்ளும், நூறுகலம் நெல்லும் மற்றத் தானியங்களும் கொண்டு வந்து காணிக்கையாகக் கொட்டுகிறேன்; என்னை விட்டு விடுங்கள் என்று அது கெஞ்சிற்று.

>>

இந்த உறுதி மொழியுடன் காம்போதி அதைத்தன் பிடியிலிருந்து விடுவித்தது.