உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

219

கூளியை அடித்துத் துரத்தி விட்டோம் என்ற பெருமித மகிழ்ச்சியுடன் காம்போதி திரும்பிற்று.

கூளியுடன் போர் செய்யும்போதே இரவு நேரம் கழிந்து விட்டது. ஆகவே, காம்போதி நினைத்தபடி போர் முழுதும் தன்னந்தனிமையில் நடக்கவில்லை. காலையில் கூவிய கோழிகள் தொலைவில் வந்து நின்றிருந்தன. தேன் கூட்டருகில் பதுங்கி யிருந்த குரங்கு, குரங்கினம் முழுவதையும் அழைத்து வந்திருந்தது. காம்போதியின் முழக்கத்துக்கு எதிர் முழக்கம் செய்த கழுதை இனம் முழுவதும் தேவைப்பட்டால் தம் இன முதல்வனுக்கு உதவும் எண்ணத்துடன் வந்து சுற்றிலும் வளையம் வளைய மாக நின்றிருந்தன.

போர்க்களத்தில் வெற்றியுடன் நின்ற வீரன் காம்போதியை எல்லா விலங்குகளும் சூழ்ந்து நின்று வாழ்க காம்போதி! வாழ்க விலங்கினத்தின் கண்கண்ட தெய்வ வீரன்!” என்று முழங்கி ஆரவாரம் செய்தன.

66

வாழ்த்திய விலங்குகளைத் தானும் வாழ்த்தி, 'ஆண்டிறுதிதோறும் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாட ஊரெல்லையில் கூடுங்கள், என்று ஆணையிட்டபின், காம்போதி வெற்றிக் களையுடன் வீடுவந்தது.

காம்போதிக்கு முன்பே காம்போதியின் புகழ் வீடு வந்துவிட்டது. காம்போதியை விலங்குகளெல்லாம் சேர்ந்து போற்றிய அதே நேரத்தில் ஊரிலுள்ள ஆண்,பெண், குழந்தைகள் அத்தனை பேரும் காட்டானிடம் வந்து, அவன் தன் கழுதை மூலம் ஊருக்குச் செய்த அருந்தொண்டைப் பாராட்டி இருந்தனர். அவர்களை வாழ்த்தி அனுப்பிவிட்டு, புடைத்துத் தெரிந்தெடுத்த நல்ல புல்கட்டுடன் அவன் காம்போதியை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

தான் ஒரு கழுதை என்பதைக் காம்போதி மறந்த கணம் ஒன்று உண்டானால், அது அந்தக் கணம் தான்!

தன் தலைவனின் இரு கைகளையும் தன் முன் கால்களால் பற்றிக் கொண்டு வீறாப்புடன் அது புல்லைக் கடித்தது.