உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(220) ||

அப்பாத்துரையம் - 35

ஆண்டிறுதியல் மனிதரும் விலங்குகளும் உழைத்த உழைப்பின் பயனாக, நெல்லும் கொள்ளும் பயறும் அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து கிடந்தன. கால்நடைகளுக்கு மட்டும் வைக்கோலை அளித்து விட்டு, மனிதர் தானியங்களைச் சோறாக்கி விருந்துண்டனர். ஆனால், காம்போதி முன்பே உத்தரவிட்டிருந்தபடி, எல்லா விலங்குகளும் ஊரெல்லையில்

கூடின.

அவற்றின் வியப்புக்கு எல்லை இல்லை. அங்கே நூறுகலம் எள், நூறுகலம் நெல், மற்றத் தானியங்களிலும் நூறு நூறு கலம் குவிந்து கிடந்தன. "இவை ஏது, யாருக்காகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியாமல் அவை விழித்தன. ஆனால், காம்போதி அவற்றினிடம் வந்து, “இவை அனைத்தும் நாம் துரத்தியடித்த கழுது ஆண்டுதோறும் நம் ஊருக்குத் தரும் திறைகள். இதில் உங்களுக்கு வேண்டியமட்டும் தின்று, மீதியை ஆண்டு முழுவதும் உங்களைக் காக்கும் உங்கள் தலைவர்களாகிய மனிதர்களுக்கும் கொடுங்கள். இதன் ஒரு பகுதியை விலங்கினத்துக்கு வேண்டும்போது பயன்படுத்தும்படி என் தலைவன் காட்டான் இல்லத்தில் ஒரு பொதுப் பத்தாயத்தில் சேமித்து வைக்கின்றேன்,” என்றது.

விலங்குகளெல்லாம்

காம்போதியின் அறிவாலும் அன்பாலும் வீரத்தாலும் தமக்குக் கிடைத்த புதுவாழ்வு பற்றி மகிழ்ந்து ஆரவாரித்தன.

குரங்கினம் தன்னை ஓர் உயிருள்ள தேராக அலங்கரித்து அதில் காம்போதியை அமரச் செய்தது, கழுதையினம் அதை முன்னின்று இழுக்கும் வடமாகவும் குதிரையினம் பின்னின்று தள்ளும் நெடுந் தடிகளாகவும் அணிவகுத்தன. பூனைகள் தேரின் பொம்மைகளாக அமர்ந்தன. பறவைகள் தேரின் கொடிகளாகவும் இயங்கின. மன்னர் பேரரசர்களுக்குக் கூட இல்லாத பெருஞ் சிறப்புடன் காம்போதி அன்று தன் இல்லத்துக்கு இட்டுச் சொல்லப்பட்டது.

காம்போதியின் பெரும் புகழை விலங்கினக் கவிஞர்களும் மனித இனக் கவிஞர்களும் போட்டியிட்டுக் காவியமாகப் பாடினார்.