உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

(223

இளங்கொற்றன் தன் நிலையை எடுத்துச் சொன்னான். அத்துடன், "எப்படியும் நான் உங்களை அதிகவிலை தருகிறவனுக்கு விற்கப் போவதில்லை. அவர்கள் மாடுகளைக் கொல்கிறவர்களாயிருந்தாலும் இருப்பார்கள். ஆகவே, குறைந்த விலையில் இப்போது வாங்கிப் பஞ்சம் கழிந்த பின் நல்ல விலையில் விற்பவர்களிடம்தான் கொடுப்பேன். பஞ்சம் கழிந்த பின் நானே வந்து வாங்கிக் கொள்வேன்,” என்றான்.

பசுக்கள் இரண்டும் ஒன்றோடன்று ஏதோ தங்கள் மொழியில் பேசிக் கொண்டன. பின் மூத்த பசுவாகிய முதுகொற்றி குடியானவனுக்கு ஓர் ஆலோசனை கூறிற்று. “நீ எங்களை விற்கவே வேண்டாம். முதல் முதல் நீ காணும் விலங்குகள் நல்லஇராசி உடையவையாகவே இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அவற்றுக்கு நீ எங்களை மாற்றிவிடு. எல்லாம் நன்மையாக முடியும்" என்று அப் பசு கூறிற்று.

நெடுநேரம் அவன் விலங்கு எதையும் காணவில்லை. ஆனால், தன்னைப் போலவே சந்தைக்குப் போகும் ஒரு கிழவியைக் கண்டான். அவள் கையில் ஒரு வேய்ங்குழல் இருந்தது. அவள் பசுக்கள் வாங்கப் போகிறதாகவே சொன்னாள். அவள் பின்னால் மூன்று அழகிய பொன்னிறச் சடைகளை, உடைய கம்பளி ஆடுகள் இருந்தன. அவற்றின் கண்கள் பொன்னிறமாகவும் நடுவேயுள்ள கருவிழிகள் நீலநிறமாகவும் இருந்தன.

குடியானவன் பசுக்கள் கூறியவற்றை அவளிடம் கூறினான். அவள் பசுக்களை நோக்கினாள். பசுக்களும் அவளை நோக்கி வால்குழைத்தன.

“என் மூன்று ஆடுகளையும் உனக்குத் தருகிறேன், நீ பசுக்களை என்னிடம் அவற்றுக்குப் பதிலாகக் கொடுத்து விட்டுப் போ,” என்றாள் கிழவி.

“பசுக்கள் என் உடன்பிறப்புகள் போன்றவை. அவை எனக்கும் என்தாய்க்கும் உதவுபவை. இவற்றுக்கு ஆடுகள் எப்படி நிகராகும்?” என்றான் இளங்கொற்றன்.

“உனக்கு அதுபற்றிக் கவலை ஏன்? இவற்றைப் பார்த்தாலே இவை சாதாரண ஆடுகள் அல்ல என்று தெரியலாமே! இ

வை