உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(224

அப்பாத்துரையம் - 35

சந்தனமரம் வளரும் தண்பொதிகைச்சாரலில் பிறந்தவை. தண்ணிழல், தண்தளிர், தண்பூ என்பவை இவற்றின் பெயர். இவற்றின் கம்பிளிச் சடைகளில் சந்தன மரத்தின் மணமும் தங்கத்தின் பொலிவும் உண்டு. தவிர, வை ஆடும் பாடும் ஆடுகள், இதோ பார்," என்று கூறி அவள் தன் வேய்ங் குழலை ஊதினாள்.

ஆடல் நங்கைகளும் தோற்கும் படி மூன்று ஆடுகளும் ஒசிந்து நெளிந்து ஒய்யாரமாக ஆடின. அத்துடன் ஓர் ஆடு முதலில் பாடிய அடியைத் தொடர்ந்து இரண்டாமடியை மற்ற இரண்டாடுகளும் பாடின.

பசுக்கள் சொன்ன சொற்களில் இளங்கொற்றனுக்கு நம்பிக்கை வந்தது. அவன் பசுக்களை அன்புடன் அணைத்து விடை கொடுத்துக் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு, ஆட்டை ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

இளங்கொற்றன் தாய், ஆடுகளைக் கண்டதும் சலித்துக் கொண்டாள். "பஞ்சகாலமில்லாவிட்டால் நான் பசுக்களை விட்டுப் பிரியவே மாட்டடேன். அத்தகைய பசுக்களைக் கொடுத்து வீணாக இவற்றை வாங்கி வந்தாயே! பார்க்கிறதற்குப் பளபளப்பாயிருப்பதைக் கண்டு ஏமாந்துபோய் விட்டாய். பசுக்களாவது அரைப்பட்டினி கிடந்தும் நமக்கு அரை வயிற்றுக்குப் பால் தரும். இந்த ஆடுகளுக்கு நாம் தீனியிடவும் முடியாது; அவை எந்த வகையிலும் பயன்படவும் மாட்டா” என்றான் அவள்.

ளங்கொற்றன்

சலித்துக்

தாயைப்போல கொள்ளவில்லை. ஆயினும் தாயின் சலிப்பைச் சிறிது போக்க எண்ணி, அவன் வேய்ங்குழலை ஊதினான். மூன்றடுகளும் பாடிக் கொண்டே அவ்விருவரையும் சுற்றி சுற்றித் தவழ்ந்தாடின. இயற்கையிலேயே உயிரினங்களிடம் பாசமுள்ள, அந்தத் தாய் அவற்றைக் கண்டு அகமகிழ்ந்து தன் கவலையைச் சிறிது மறந்திருந்தாள்.

ஆனால், ஆடுகளுக்கு உணவுக்கு என்ன செய்வது என்று தாய் கவலைப்பட்டாள். உடனே பெரிய ஆடு, “அதைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். என் பெயர் தண்ணிழல். குளிர்ச்சி பொருந்திய நல்ல நிழல் இருக்குமிடத்துக்கு என்னை