உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

1225

இட்டுச் சென்றால் போதும். நான் நிழலை உண்டு வாழ்வேன்," என்றது.

அடுத்த ஆடு, "என் பெயர் தண்தளிர். என்னைச் செடி கொடி தளிர்க்குமிடம் கொண்டு செல்லுங்கள். தளிர் மீது தவழ்ந்து வரும் தென்றலை நான் உண்டு வாழ்வேன்” என்றது.

கடைசி ஆடு, “என் பெயர் தண்பூ, செடிகள் பூத்துக் குலுங்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு செல்லுங்கள். பூக்களின் நறுமணம் உண்டு நான் வாழ்வேன்,” என்றது.

தாய் அவற்றுக்குள்ள நன்மதியும் கூர் அறிவும் கண்டு மனமகிழ் வடைந்தாள்.

இளங்கொற்றன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு ஆங்காங்கே குடியானவர்கள் கூடுமிடங்களில் நின்று வேடிக்கை காட்டினான். வேடிக்கை பார்த்த ஏழை மக்கள் செப்புத் துட்டுகளை வழங்கினார். வை அவர்கள் உணவுக்குப்

போதுமானவையாயிருந்தன.

படிப்படியாக ஆடுகளின் புகழ் எங்கும் பரந்தது. செல்வர் வீடுகளிலிருந்தும் ஆடுகளின் ஆடல் பாடல்களைக் காணவும், கேட்கவும் அழைப்பு வந்தது. செல்வர்கள் வெள்ளிப்பணம் வழங்கினார்கள். இதனால் குடியான வனுக்கும் அவன் தாய்க்கும் வாழ்வு இன்னும் சற்று வளமாயிற்று.

ஒரு நாள் நகரிலுள்ள பொத்தப்பி நாட்டரசன் அரண்மனையிலிருந்தே ஆடுகளின் ஆடல்பாடலைக்

காட்டுவதற்கான அழைப்பு வந்தது.

இளங்கொற்றன் ஆடுகளுடன் சென்றான். மன்னனும் அரசியும் அவர்கள் ஒரே புதல்வியான இளவரசியும் வந்து ஆடலைக் கண்டு களித்தனர்.

ளவரசி சி தன்னை மறந்து ஆடுகளிடமே ஈடுபட்டு

இருந்தாள்.

ஆடுகளுள் ஓர் ஆட்டையாவது தனக்கு வாங்கித் தரும்படி இளவரசி அரசனை வேண்டினாள். அரசன் இளங்கொற்றனை அழைத்து ஆடுகளுள் ஒன்றை விலைக்குத் தருமாறு கேட்டான்.