உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(226)

||

66

அப்பாத்துரையம் - 35

“அரசே, நான் தங்கள் குடி; உங்கள் விருப்பத்தை நான் மதிக்க வேண்டும்; ஆனால், இந்த ஆடுகள் தெய்வத்தன்மை பொருந்தியவை; விலைக்கு வாங்கவோ விற்கவோ முடியாதவை; என்றாலும் இளவரசிக்கு ஆடுகளிடம் உண்மையான பற்றுத லிருந்தால், ஒரு மிடா உணவுப்பொருட்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்து, என் தாயிடம் கோரி அதைப் பெறலாம்,” என்றான்.

இளவரசிக்கு ஆட்டினிடம் உயிரார்ந்த பற்றுதல் ஏற்பட்டு விட்டது. அவள் இந்த ஏற்பாட்டுக்கு முழு மனதுடன் சைந்தாள். ஓராண்டுக்குப் போதிய உணவுப் பொருள்கள் ளங்கொற்றன் வீடு வந்து சேர்ந்தன. அவற்றைக் கண்டு, தாய் மிகவும் மனமகிழ்ந்தாள். அத்துடன் அரசன் மகளே தம் குடிசையேறி வந்து ஆடுகளில் ஒன்றைக் கேட்ட போது, அவள் மனமகிழ்ச்சியுடன் ஆட்டை ஈந்தாள். ஆடுகளின் பெருமையையும் இப்போது அவள் உணர்ந்தாள்.

வெற்றியும் திருவும் - சிலருக்கு இறுமாப்பைத் தூண்டும். சிலருக்குப் பேரவாவை உண்டு பண்ணும். குடியானவன் தாய்க்கோ, குடியானவனுக்கோ இந்த இரண்டு மாறுதல்களும் உண்டாகவில்லை. தாய், வந்த செல்வத்தில் மகிழ்ந்தாள். ஆனால் மகன் அம் மகிழ்ச்சியுடன் அமைய வில்லை. ஒரு புதிய அவா அவன் உள்ளத்தின் ஆழத்தில் எழுந்தது. அதை அவன் வெளியிட்டுச் சொல்லவோ, தனக்குள்ளேயே கூறவோ கூடத் துணியவில்லை. ஆயினும் அந்த அவா அவன் சிந்தனை களிடையே உள்ளூர உலவிக்கொண்டே இருந்தது.

இளவரசி தன் நிலைமைக்கு எண்ணக் கூடாத எட்டாக் கனியானாலும் ஆடுகளின் நல்வரத்தின் மூலம் ஒரு வேளை அதை எட்டிப்பிடிக்கக் கூடும் என்று அவன் எண்ணினான்.

இளவரசியிடம் இருந்த ஆடு அவள் எதிர்பார்த்த மனநிறைவை அவளுக்கு அளிக்கவில்லை. ஏனென்றால், அது பாடவோ ஆடவோ மறுத்தது. அரசவையின் தலைசிறந்த பாடகர்கள் பாட்டைக் கூட அது சட்டை செய்யவில்லை. அரண்மனை ஆடலாசிரியனிடம் இது பற்றிக் கேட்டபோது, அவன் அது தனக்குரிய கூட்டிணையுடன்தான் பாடும் என்று ஆலோசனை கூறினான். இவ்வாலோசனையின் பயனாக இளங்கொற்றனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது.