உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(252)

அப்பாத்துரையம் - 35

15. கச்சணன் கண்ணாடி வாங்கப்போன கதை

கச்சணன் என்பவன் கல்வியில்லாதவன். அவன் ஒரு செல்வன் வீட்டில் தோட்டக்காரனாயிருந்தான் செல்வ னுக்கு சற்றே வெள்ளெழுத்து. ஆகையால் அவன் கண்ணாடி போடாமல் வாசிக்க முடியாது. அதைக் கவனித்த கச்சணன், 'கண்ணாடி யிருப்பதனால்தான் இவர் வாசிக்கிறார், ஆகவே நாமும் கண்ணாடி அணிந்து கொண்டால் வாசிக்கலாம், என்று எண்ணினான்.

அதுமுதல் அவன், கடைத்தெரு வழியாகப் போகும் போதெல்லாம் கண்ணாடிக் கடைகளில் நுழைந்து பல கண்ணாடிகளையும் போட்டுப்போட்டுப் பார்த்து வருவான். ஒரு கண்ணாடியும் அவனுக்குப் பிடிக்காதது கண்டு சலிப்படைந்த கடைக்காரர், “என்ன ஐயா, உமக்கு ஒன்றும் பிடிக்கவில்லையா?' என்று கேட்டால் அவன், "ஒன்றாவது நல்லதாயில்லை, ஒன்றாலும் எழுத்துக்கள் வில்லையே? என்பான்.

வாசிக்க

வர

பல தடவையும் இப்படிச் சொல்வது கண்டு கடையி லிருந்த ஒரு பெரியவர், “உங்களுக்கென்ன வாசிக்கவே தெரி யாதோ?" என்றார். அப்போது தான் வந்தது கச்சணனுக்கு உண்மையான சீற்றம்! அவன் அவரை முறைத்துப் பார்தது, "பெரியவராயிருக்கிறீரே, உமக்கு இவ்வளவு தெரியாதா? வாசிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் கண்ணாடி வாங்கவர வேண்டும்?” என்றான்.

அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

தன் கேள்வி சரியான கேள்வி, அதனாலே தான் எல்லோரும் சிரித்தார்கள்' என்று எண்ணிக் கொண்டு திரும்பி விட்டான் கச்சணன்.