உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

253

16. நன்றியைக் காட்டும் முறை

ஒரு வணிகன் பஞ்சகாலத்தில் தனக்கு அறிமுகமான ஓர் ஏழை ஓவியக்காரனையும் அவன் குடும்பத்தாரையும் வைத்துப் பாதுகாத்தான்.

சிலகாலம் சென்றபின், ஓவியக்காரனுக்கு நற்காலம் ரும்பிற்று. நகரங்களிலும் அரசவைகளிலும் அவன் தீட்டிய படங்களுக்கு மதிப்பு ஏற்பட்டு அவனுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் மட்டற்ற அளவில் வந்து குவிந்தன. அப்போது அவன் தன்னைப் போற்றிய வணிகனிடம் சென்று அவனுக்கு ஒரு பெருந்தொகை வழங்கப்போனான்.

வணிகன் புன்முறுவல் பூத்து, "நண்பரே, உமது நல் லெண்ணம் கண்டு மகிழ்ச்சிகொள்ளுகிறேன். ஆனால் நீர் நன்றியறிவிக்கும் வழி இன்ன தன்று அறியாததற்கு வருந்துகிறேன்." என்றான்.

ஓவியக்காரன் வியப்புற்று, “ஒப்பற்ற வள்ளலே, நான் செய்த தவறு யாது?" என்றான்.

வணிகன், “நண்பரே, என்னை வள்ளல் என்கிறீரே, நான் உமக்குச் செய்தது உண்மையில் வண்மையானால் அது போன்ற வண்மைச்செயலை நீர் செய்தாலன்றோ நன்றி யுடையவராவீர்" என்றான்.

ஓவியக்காரன் பின்னும் மலைப்புடன் நிற்பது கண்டு, வணிகன் தன் கருத்தை இன்னும் விளக்கி “நான் உமக்குச் செய்த நன்றி உம் ஒருவரை நினைத்துச் செய்ததன்று. மனித வகுப்பை எண்ணி, அதில் துன்புற்று நின்ற உமக்குச் செய்தது. நீர் நன்றியறிதல் காட்டுவதும் அம்மனித வகுப்புக்கு ஆதல்