உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

255

17. வாய்மையும் வண்மையும்

உள்ளத்திற் பட்டதை உரைக்க வாய்மை வேண்டும். ஆனால் அதனை ஏற்று நன்கு மதிக்க வண்மையும் (தியாக மும்) இன்றியமையாதது.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் தமிழ் நாட்டிற்கு வடக்கிலும் மிகு தொலைவுசென்று பகைவரை வென்றடக்கித் தன் கொடி நிழலை விரிவுபடுத்தி வந்தான்.

பகைவர் நாடுகளை வென்றபின், 'தன்போர் வீரர் அந்நாட்டு மக்களுள் எவர் உடைமையையும் கொள்ளை யிடக்கூடாது' என்று அவன் ஆணையிட்டிருந்தான்.

ஆமல்லன் என்ற வீரன் ஒரு வீட்டிலிருந்த வெல்லப் பொதி ஒன்றைப் பறித்துக் கொண்டான். அரசன் அவனை வெறிக்கப் பார்த்து, “நீ எப்படி உணர்வின்றி என் ஆணையை மீறி அவன் உடைமையை கைக்கொண்டாய்?” என்று கேட்டான்.

ஆமல்லன், "அரசே, தாம் இந்நாட்டு மன்னர்களின் உயிரையும் உடைமையையும் மானத்தையும் கொள்ளையிடு கின்றீரே. நான் ஒரு வெல்லப் பொதிமட்டும் எடுத்தது குற்றம் என்று சொல்கின்றீரே!"என்றான்.

அரசன் சினம் மாறிப் புன்முறுவல் கொண்டான். பொருள் பறிபோன ஆளைக் கூப்பிட்டு அவனுக்கு நாலு மடங்காகப் பொருள் கொடுத்து அனுப்பிவிட்டு ஆமல்லனை அழைத்து, அன்புடன் அணைத்துக்கொண்டு, “வீரரே! உமது வாய்மையுரை கேட்டு மகிழ்ந்தேன். ஆயினும் உமக்கு நான் நேற்று மறு மொழி கூறாதது உமது வாய்மையை மதிக்கவேயாகும்.நாம் வேற்று நாட்டு மன்னர்களின் உயிரையும் உடைமையையும் பிறவற்றையும் கொள்ளை கொள்வது நமக்காகவா? மேலும்,