உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

257

18. நரியும் சேவலும்

ஒரு நாள் ஒரு நரி தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு சேவற்கோழியைக் கண்டது. தான் ஓடிப் பிடிப்பதற்குள் சேவல் ஓடிவிடும் என்று அதற்குத் தெரியும். ஆகவே சூழ்ச்சி யால் கோழியைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அது கோழியினிடம் “தம்பி சேவலே, செய்தி தெரியுமா உனக்கு?”என்றது.

சேவல், பறந்து தப்ப இடமிருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, "என்ன செய்தி, பொல்லாத நரியண்ணரே!”என்றது.

66

னி

இனி நமக்கிடையே எத்தகைய பொல்லாங்கும் இல்லை. விலங்குகள் எல்லாம் சேர்ந்து ‘இனி ஒருவரை ஒருவர் கொல்லவோ தின்னவோ கூடாது.எல்லாரும் சைவமாய் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று தீர்மானித்தன. அதனைக் கொண்டாட எல்லாரும் விழா அயர்கின்றனர். நாமும் விழாக் கொண்டாடலாம், வா,” என்றது.

சேவலுக்கு நரியின் சூழ்ச்சி விளங்கிவிட்டது. ஆகவே அது, "அப்படியா, மிகவும் மகிழ்ச்சியே. ஆனால் நமது விருந்திற்கு ன்னொரு பங்காளியும் வருகிறான். அதோ நாயண்ணா வருகிறான் பார்.” என்றது. உடனே நரி ஓடத்தொடங்கிற்று.

66

அண்ணா, முன்பு விலங்குகளுக்குள் பொல்லாங்கு எல்லாம் தீர்ந்துவிட்டது என்றீர்கள். இப்போது நீங்களே ஓடுகின்றீர்களே, அஃது ஏன்? என்று கேட்டுச் சேவல் ஏளனம் செய்தது.