உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(258

அப்பாத்துரையம் - 35

19. எதிலிருந்து பாதுகாப்பு?

ஒரு பாதுகாப்புப் பொருளகத்திற்கு ஆட்கள் சேர்க்கப் பலர் 'ஆட்பேர்’அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுள் 'காலடி' என்பான் ஒருவன் இருந்தான். அவன் வாயடியிலும், பிறரை நயமாகப் பேசி வலியுறுத்துவதிலும் திறமை வாய்ந் தவன். ஆனால் அவன் பெரும்பாலும் எதிரியின் நிலை மையைக் கவனிப்பதோ, அவன் நேரத்தையும் வேலைகளை யும் மதிப்பதோ இல்லை.

ஒரு நாள் தமது வேலையின் பொருட்டாக ஒருவர் விரைந்து தம் அலுவலகம் போய்க் கொண்டிருந்தார். காலடி பலகால் அவரைத் தன் பொருளகத்திற்கு உறுப்பினனாகச் சேர்க்க முயன்றும், அவர் நாளை நாளை என்று கடத்தி வந்தார். இன்று எப்படியாவது அவரை இழுத்துவைத்துத் தன் நோக்கம் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அவன் தன் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். ஆகவே அவரைப் புன்முறுவலுடன் வலுவந்தமாகத் தகது நிலையத்திற்கு இழுத்து வந்து, ‘எப்படியாவது இன்று என் கருத்திற்கு இணங்கியாக வேண்டும்’ என்றான்.

அப்பெரியவர் ஏதோ எண்ணியவராய், "சரி, உம் அலுவலகத் தலைவரை இங்கே அழைத்துக் கொண்டு வருக!" என்றார்.

அலுவலகத்தில் சேரத்தான் தலைவரை அழைக்கிறார் என்று எண்ணிக்கொண்டு, காலடி மகிழ்ச்சியுடன் ஓடித் தன் தலைவரை அழைத்துக் கொண்டு வந்தான். தலைவரும் வந்தவரை வணங்கி முகமெலாம் புன்முறுவல் கொண்டு சேர்ப்புத்தாளை ஏந்தி, “எங்கள் அலவலகத்தில் எல்லா வகையான பாதுகாப்புக்