உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

261

21. நடு நிலை

கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஃபிரான்சு நாட்டில் நெப்பொலியன் ஒரு பேரரசனாக விளங்கினான். அவன் பெரும்பாலும் அந்நாளைய உலகத்தை முற்றும் வென்றடக்கிய வீரன். அவன் குடிகளும் படை வீரரும் அவனைத் தந்தையென நினைத்து நினைத்து மதிப்பும் மதிப்பும் அன்புங் கொண்டு அவனுக்குத் துணிபுரிந்து வந்தனர். அன்பினால் மதிப்புக் கெடுவதும், மதிப்பினால் அன்பு குறைவதும் உலக இயற்கை. நெப்போலியன் போற்றத் தக்க வகையில் இரண்டும் கெடாதபடி பார்த்து வந்தான்.

ஒரு நாள் நெப்போலியன் தெருவழியே போய்க்கொண் டிருந்தபோது போரில் நற்பெயர் வாங்கிய படை வீரன் ஒருவன் அவனைப் பார்த்து, 'ஐயனே! இங்கே நான் ஒரு பந்தயம் வைத்துவிட்டேன். நான் வெற்றிலை போடும்போது தங்கள் உடை வாளால் பாக்கு வெட்டிக்கொண்டால் ஒரு நூறு பொன் பெறுவது என்றும் இல்லாவிட்டால் நூறுபொன் கொடுப்பது என்றும் பேசி இருக்கிறேன். நட்புரிமையில் சொல்லிவிட்ட என் சொல்லைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.

நெப்பொலியன், “நான் என் நட்புரிமையையும் பாது காக்க வேண்டும், அரசுரிமையையும் பாதுகாக்க வேண்டும். நீ பந்தயமாக வைத்துக் கிடைக்கும் பணத்தின் பதின்மடங்கு உனக்குத் தருகிறேன். அன்றியும் பந்தயம் வைத்த உன் நண்பரும் நீயும் என் பெயரால் அரசமாளிகையில் விருந்தயர்க!” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.