உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(262)

அப்பாத்துரையம் - 35

22. யார் பெரியவர்

காற்றுக்கும் பகலவனுக்கும் இடையே ஒரு சொற்போர் எழுந்தது. அவர்கள் இருவரிடையே யார் பெரியவர் என்றறிவதே அதன் நோக்கம்.

"அதோ சாலை வழியே செல்லும் மனிதன் போர்த்துச் செல்லும் போர்வையை அகற்றுபவர் யாரோ அவரே பெரியவர்” என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

காற்றுத் தன் வன்மையையெல்லாம் சேர்த்து அடித்தது. மனிதன் தன்னாலியன்ற மட்டும் இறுக்கமாகப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டான்.

பகலவன் சற்றே காய்ந்தான். மனிதன் உடனே போர் வையை அகற்றினான்.

பகலவன் மென் கதிர்களுக்குக் காற்றின் பெருவீச்சுத் தோற்றது.