உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

263

23. என் பொருள்; அதை என்ன செய்தால் என்ன?

குடியானவன் ஒருவன் ஓர் எருதை நையப்புடைத்தக் கொண்டிருந்தான். மாற்றுருவில் நாடு சுற்றிப்பார்வையிட்டு வந்த அந்நாட்டு இளவரசன் எருதின் மேல் மனமிரங்கிக் குடியான வனைப் பார்த்து “ஏனப்பா இந்த எருதை இப்படி வருத்துகிறாய்” என்று கேட்டான்.

குடியானவன் அவனை அசட்டையாகப் பார்த்து “ஏன் ஐயா, உம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறது தானே! எருது என் பொருள், அதை நான் என்ன செய்தால் உமக்கென்ன?” என்றான்.

இளவரசன் மனம் மிகவும் புண்பட்டது. உடனே அவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த நீண்ட சவுக்கை எடுத்துக் குடியானவன் முதுகில் விளாசினான். குடியானவன், 'ஐயோ, அப்பா! ஏன் என்னை இப்படி முறையின்றி அடிக்கிறாய்?” என்றான்.

ளவரசன், "அடே, சவுக்கு என் பொருள். அதை நான் என்ன செய்தால் உனக்கென்ன?” என்றான்.

குடியானவன் தன் பிழையறிந்து மன்னிப்புக் கேட்டுக்

கொண்டான்.