உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(264)

அப்பாத்துரையம் - 35

24. காக்கைகள் கணக்கறிவு

ஒரு குடியானவன் தன் வயல்களில் காக்கைகள் வராமல் காக்க வேண்டுமென்று பற்பல சூழ்ச்சிகள் செய்தான். அவற்றைச் சுடத் துப்பாக்கியுடன் சென்றால் அவை அத் துப்பாக்கி தொலைவிடம் செல்லும்வரை வருவதில்லை. ஆகவே அங்கே குடில் கட்டி அதில் துப்பாக்கியுடன் ஒளிந்திருந்து பார்த்தான். அவனும் துப்பாக்கியும் வெளிச் செல்வதைப் பார்த்தன்றிக் காக்கைகள் அண்டவில்லை.

"ஐயறிவினும் குறைபட்டவையாகிய இக்காக்கைகள் நம்முடன் போட்டியிடுவதா? எப்படி யாவது அவற்றை ஏமாற்றுகிறேன்" என்று அவன் வரிந்து கட்டிக்கொண்டு முனைந்தான்.

தன்னுடன் துப்பாக்கியோடு இன்னொருவனைக் குடிலுக்குட் கூட்டிச் சென்று, அவனைத் துப்பாக்கியுடன் வெளியே போகவிட்டு ஒளிந்திருந்து பார்த்தான். காக்கைகள் இரண்டுபேர் உட்சென்றதைப் பார்த்ததால், இன்னொருவன் வெளியே போகட்டும் என்று காத்திருந்தன.

குடியானவனுக்குக் கடுஞ்சினம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் 'இக் காக்கைகளுக்கு எண்ணக்கூடத் தெரியும் போலிருக்கிறதே! பார்ப்போம். எதுவரை அவற்றின் கணக்குச் செல்லும்' என்று எண்ணியவனாய் மறுநாள் மற்றும் இருவருடன் குடிலுக்குட் சென்று இருவரையும் வெளியே அனுப்பிவிட்டான். காகங்கள் அப்போதும் மூன்றாம் மனிதனுக்காகக் காத்திருந்தன.