உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

281

யிருந்தது. போர்த் தலைவர் யாதொரு அட்டியுமின்றிப் "பெண்டு பிள்ளைகளைமட்டும் காப்பாற்றுங்கள். என் போர் வீரர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார்.

உடனே போர்வீரர் தலைவர், போர்முரசறைந்து வீரரை அழைப்பித்தார். கப்பல் மீகாமன் பெண்டு பிள்ளைகளை அழைப்பித்தார். சில வினாடிகளுக்குள் அவர் ஆணைப்படி பெண்டு பிள்ளைகளும், சிலகிழவர்களும் படகுகளிலேறிக் கப்பலை விட்டு வெளியேறினர். போர்வீரர்கள் கப்பலின் மேல்தட்டில் அணிவகுத்து நின்று என்றுமில்லாப் பெரு மகிழ்ச்சியுடன் அப்பெண்டு பிள்ளைகளிருந்த படகு நோக்கிக் கைக்குட்டையை வீசி அவர்களை வழியனுப்பினர்.

தமக்கென உயிர்மறுத்த வீர மறவரையெண்ணி ஆங்கிலப் பெண்மணிகள் ஆராக் கண்ணீர் விட்டனர். ஆனால் மூழ்கும் கப்பலிலிருந்த வீரர், கப்பல் முழ்குமுன்னரே இருகூறாக அணிவகுத்து நின்று ஒருவரை ஒருவர் இலக்குத் தவறாது தலைவர் உத்தரவுப்படி ஒரே நொடியில்

கொன்றனர்.

சுட்டுக்

பழந்தமிழ் வீரர் மரபில் வந்த நாம் இத்தகைய வீரராகும் நாள் எந்நாள்? நம் பெண் மக்கள், நம் பிள்ளைகள், நம்மிடையே முதியோர், நலிந்தோர் ஆகியவரைப் பேணித் தன்னல மறுத்துப் புகழ் பெறும் நாள் எந்நாள்? அதுவே நன்னாள், அதுவே நம் நாள் ஆகும் என்னலாம்.