உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

[283

35. தந்தை சொற் பிழைத்ததற்கான தண்டனை

ஆங்கில நூலாசிரியரிடையே பேனாமுனைத் திறமட்டு மன்றி நாத்திறமும், அறிவோடு அன்பும் அமைதியும் நிறைந்த உளப்பாடும் பெற்ற அருளாளர், பேராசிரியரென நன் மதிப்புப் பட்டம் பெற்ற ஜான்ஸன் என்ற பெரியார். அவ ருடைய பெரு வாழ்விலுள்ள சிறு பிழை ஒன்றை மிகுந்த சுவையுடன் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார்.

பெரியார் என்றும் பேரறிஞர் என்றும் மதிக்கப் பட்ட அவர், ஒருகால் உச்சி வேளையில் லிச்ஃபீல்டு என்ற நகர்ச் சந்தையில் மக்கள் நடமாட்ட மிகுதியாலும் பொருட்சிதைவாலும் அருவருக்கத்தக்க முறையில் சேறாகக் கிடந்த பகுதி ஒன்றில் யாவருங் காண மேலாடையும் தலையணியும் அகற்றி அரை நாழிகை நேரம் நின்றாராம். அது எதற்கென அறியாது முதிய பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் அவரை எள்ளி நகையாடின ராம். ஆனால் அவர் அங்ஙனம் வாளா நின்று ஒருவரிடமும் ஒன்றும் கூறவில்லையாம், பின்னர் தம் இல்லத்திற்குத் திருப்பிச் சென்றாராம்.

இதனை கவனித்திருந்த அறிஞர் ஒருவர் நெடுநாள் கழித்து அவரைக் கண்டபோது அதுபற்றி உசாவினார். அப்போது அவர் கூறியதாவது.

"இளமைக் காலத்தில், ஒரு நாள் என் தந்தை சந்தைக்குப் போகும்போது என்னையும் உடனழைத்துச் செல்ல விரும்பி னார். அப்போது நான் கல்லூரி மாணவனாயிருந்தேன். ஆரவார உடையில் விருப்பமும், பகட்டு வாழ்வும் என்னிடம் குடி கொண்டிருந்தன. ஆகவே, அன்று விடுமுறை நாளா யிருந்தும் நாட்டுப்புற உடையில் சென்ற என் தந்தையுடன் என்