உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(284) ||__

அப்பாத்துரையம் - 35

நண்பர்களும் பிறரும், காணச் சந்தைக்குக் கூடை சுமந்து செல்ல வெட்கி நான் உடன் செல்ல மறுத்துவிட்டேன்.

"அதே சந்தைப் பக்கமாகப் பெரியவனான பின் நான் போனபோது இச்செய்தி எனது நினைவுக்கு வந்தது. என் பிழையை நான் உணர்ந்து கொண்டேன். நேரில் மன்னிப்புப் பெறத் தந்தை அப்போது உயிருடனில்லை. ஆகவே அவர் உயிர் நிலையை எண்ணி நானே என்னைத் தண்டிப்பதன் வாயிலாக மனச்சான்றின் வழி அவர் மன்னிப்பைப் பெற எண்ணினேன். முன் தந்தை பணிமீறக் காரணமாயிருந்தது 'பிறர் ஏளனஞ் செய்வார்களே' என்ற அச்சமே யாதலால் அவ்வேளனத்தை இப்போது விரும்பி மேற்கொள்வதனால் தந்தை உயிர் நிறைவடையும் என்று எண்ணி அங்ஙனம் சந்தையிற் சென்று நின்று என் குற்றத்திற்குக் கழுவாய் தேடினேன்" என்றார்.

அறிஞர்க்கும் பிறர்க்கும், இச் செய்தி கேட்டு உள்ளூர நகை ஒரு புறமும், பரிவு ஒருபுறம் தோன்றின. ஆனால் அவற்றின் மிகுதியாக அப்பெரியாரின் எளிமையினிடையே தோன்றிய பெருந்தகைமைகண்டு மகிழ்வும் இறும்பூதும் வேறு தோன்றின.

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதனை விளக்க இதனினும் சிறந்த நிகழ்ச்சி காணக் கூடுமா?