உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

285

36. ஐம்பது ரூபா இலாபமே

ரு தொழிற்சாலையின் தலைவர் மிகுந்த கண்டிப் புள்ளவராக இருந்தார். அவர் தமது நேரத்தைச் சிறிதும் வீண் போக்குவதே இல்லை. பத்திரிகைக்குச் செய்தி யனுப்புவோர் முதலானவர்களை அவர் பார்ப்பதே இல்லை.

ஒருநாள் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் தம்மைச் சிறிது நேரம் பார்த்துப் பேசவேண்டும் என்று செய்தியனுப்பி னார். அதற்குத் தொழிற்சாலைத் தலைவர் தாம் யாரையுமே பார்ப்பது இல்லையென்றும் அப்படிக் கட்டாயமாகப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்னின் ஐந்து நிமிட நேரம் மட்டும் பார்க்கலாமென்றும் அதன் பொருட்டு ரூபா ஐம்பது தரவேண்டும் என்றுஞ் செய்தியனுப்பினார்.

பத்திரிகைச் செய்தியாளர் (நிருபர்) ரூபா ஐம்பது தந்து ஐந்து நிமிட நேரம் பேச விருப்பம் என்றும் மறு மொழி அனுப்பினார். தொழிற்சாலைத் தலைவர் அதற்கு நாளும் மணியுங் குறிப்பிட்டுத் தெரியப்படுத்தினார்.

குறிப்பிட்ட நாளில் பத்திரிகையாளர் தொழிற்சாலைத் தலைவரைப் பார்த்தார். அவர் கேட்டிருந்த படி ரூபாய் ஐம்பதையுங் கொடுத்துவிட்டு ஒன்றுக்கும் பயனற்ற வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிட மானதும் தொழிற்சாலைத் தலைவர், பத்திரிகையாளரைப் பார்த்து, “நீர் ரூபா ஐம்பதை இழந்துவிட்டீர் போலிருக் கிறதே" என்றார்.

இதனைக் கேட்ட பத்திரிகையாளர், “அப்படியன்று, ஐம்பது ரூபா இலாபமே” என்று கூறினார். தொழிற்சாலைத் தலைவர், "அஃதெப்படி லாபம்?" என்று கேட்கப் பத்திரிகையாளர், “நானும் என் நண்பர் ஒருவரும் பந்தயம்