உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

[289

39. எனக்கு வீண் தொல்லைதானே

ஒரு செல்வனிடத்திலே ஓர் அரைச் சோம்பேறி வேலை யாளாக அமர்ந்திருந்தான்.சொன்ன வேலைகளை அந்தச் சண்டி ஒழுங்காகச் செய்யவே மாட்டான். ஏதாவது தில்லு மல்லுப் பேசிக்கொண்டு அரைகுறையாகச் செய்து முடிப் பான். ஆயினும் அவ்வேலையாளைச் செல்வன் விரட்டி விடவில்லை. ஏதோ ஒரு பற்றினால் வைத்துக் கொண் டிருந்தான்.

ஒரு நாள் செல்வனுக்குச் சிறிது காய்ச்சல் கண்டது. அவன் வேலையாளைப் பார்த்து, "மருத்துவர் வீட்டிற்குப் போய் அவரை உடனடியாக அழைத்துக்கொண்டுவா" என்று சொன்னான். பிறகு இருவருக்கும் பின்வருமாறு உரையாடல் நடைபெற்றது.

வேலையாள்: இப்பொழுது காலை பத்து மணி. மருத்துவர் வீட்டில் இருக்கிறாரோ, அல்லது எங்கேனும் வெளியே போய்விட்டாரோ?

செல்வன்: வீட்டில் இருப்பார் போய்ப்பார்

வேலை: இருந்தாலும் உடனே வருகிறாரோ அல்லது பிறகு வருகிறேன் நீ போ என்கிறாரோ.

செல்வன்: வருவார் போ.

வேலை: அப்படி இருந்து அவர் உடனே இங்கு வந்து மருந்து கொடுத்தாலும் காய்ச்சல் நிற்கிறதோ இல்லையோ? செல்: மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்று விடும்

போ.

வேலை: அப்படி நிற்காவிட்டால் என்ன செய்கிறது?