உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

31

கூடிற்றேயன்றிக் குறையவில்லை. ஒவ்வொரு குறும்பின்போதும் அவள் அவனை மெல்ல கண்டிப்பாள். ஆனால், ஒவ்வொரு குறும்பின் முடிவிலும் அவள் அவனை முன்னிலும் மிகுதியான ஆர்வத்துடன் அணைத்துக் கொள்வாள்.

அவள் உண்ணும் உணவு, அவன் உண்ணும் உணவாகவேயிருந்தது. அவள் விரும்பும் பொருள்கள் யாவும் அவன் விரும்பும் பொருள்களாகவே இருந்தன. அவள் பொறுமைகூட, அவன் குறும்பின் உருவிலேயே கரந்து உலவிற்று.

மெல்லியல்புடையவர்கள் பெண்கள். அம்மெல்லியலார் களுக்குள்ளும் மெல்லியல்புடையவள் சேதாம்பல். ஆனால், தென்றல் வயிற்றில் விளைந்த புயல்போல மணிவேல் விளங்கினான். புயலில் வேகம் கண்டு தென்றல் நடுங்கிற்று. ஆயினும்,பாசத்தால் புயலுடன் தென்றல் கட்டுண்டு அலைந்தது. அவன் காடுமேடெல்லாம் சுற்றினான். அவனுக்கு ஏதேனும் இன்னல் நேர்ந்து விடுமோ என்ற கவலையால், அவளும் வேறு வழியில்லாமல் அவனுடன் அலைந்தாள்.

கே

ஒருநாள் சோழிக்கற்கள் நிறைந்த கடற்கரையரு மணிவேல் சுற்றினான்; சோழிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சேதாம்பல் சற்றுத் தொலைவில் இருந்து அவனைக் கவனித்த வண்ணம் இருந்தாள். அங்கே ஆளற்ற ஒரு படகு கிடந்தது. மணிவேல் அதைத் தாயினிடம் சுட்டிக் காட்டினான்.“அம்மா, அதைக் கடலுக்கு இழுத்துவா. இருவரும் அதில் சிறிது பயணம் செல்வோம்” என்றான்.

66

"ஆளில்லாப் படகை எடுத்துச் செல்லலாமா மணி? உடையவர்கள் வந்தால் அவதிப்படுவார்கள். நமக்கும் அதனால் தொல்லையே வரும். மேலும், படகைக் கடலில் ஓச்சி, நம்மைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வருவது யார்?" என்று அவள் வாதிட்டாள்.

"நான் இருக்கிறேன், அம்மா! உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? உங்களுக்கு அச்சமாயிருந்தால் நான் போய்வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்” என்றான் அவன்.

பாவம்! அச்சம் இன்னது என்பதை அவன் என்றுமே அறிந்ததே இல்லை. அத்துடன் அன்னை அஞ்சியது தனக்காக