உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

II.

அப்பாத்துரையம் - 35

அல்ல; அவனுக்காகவே என்பதையும் அவன் உணரவில்லை. அவள் பேசாது படகை அவனிடம் தள்ளினாள். அவன் ஏறு முன்பே அவளும் ஏறினாள். இறப்பதானால் மகனுடனே இறக்கவேண்டும்; அல்லது மகனுக்காகவாவது இறக்க வேண்டும் என்று அவள் துணிந்திருந்தாள்.

அந்தப் படகுக்குத் தண்டிருந்தது. ஆனால், தண்டு உகைக்கத் தேவையில்லை. தண்டில்லாமலே அது கடல் கிழித்துச் சென்றது. அதற்குப் பாயும் இல்லை; பாயின் தேவையுமில்லை; ஏனென்றால், அது காற்றை எதிர்த்தும், காற்றுக்குக் குறுக்காகவும் சென்றது. அது ஒரு மாயப் படகு. கடல் நடுவிலுள்ள ஏதோ ஒரு மின்காந்தம் போன்ற ஆற்றல் அதைக் கடல் நடுவுக்கே இழுத்தது.

அவள் நடுங்கினாள்; அவன் கைகொட்டிக் கும்மாளம் அடித்தான்.

நடுக்கடல் கடலாக லாக இல்லை. அது நடுவே புழையுடைய ஒரு குவிகுழல்போல இருந்தது. கடல் நீர் நாற்புறமிருந்தும் ஒரே பெருஞ்சுழியாய் அந்தக் குவிகுழல் வடிவில் சுழித்து உள்சென்றது. படகும் ‘விர் விர்' என்ற அந்தச் சுழியில் சுழன்றது. வட்ட வட்டமாக, மேலிருந்து கீழாகச் சுழன்று வந்தது.

சுழியில் அவர்களுக்கு எதிர்திசையில் குருதிச் சிவப்பான குமிழிகள் மிதந்து வந்தன. அவை மேல்நோக்கிச் சுழன்று வந்த வண்ணம் இருந்தன. மணிவேல் குனிந்து அவற்றை எடுத்துப் பார்த்தான். அவை நெல்லிக்காயினும் பெரிதான வண்ண மாணிக்கங்களாயிருந்தன. ஒவ்வொன்றாக அவன் அம் மாணிக்கங்களில் ஒன்பது எடுத்தான். ஆனால், சேதாம்பல் ‘அவற்றில் என்ன மாயம் இருக்குமோ?' என்று அஞ்சினாள். “அவற்றை எடுக்காதே கண்மணி. அவற்றால் ஏதேனும் இடர் ஏற்படக்கூடும்.போட்டுவிடு" என்றாள்.

வாழ்க்கையிலேயே முதல் தடவையாக, அவன் தாய் சொல்லுக்கு அன்று ஓரளவு மதிப்புக் கொடுத்தான். மாணிக்கங்களில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டான். மற்றவற்றைச் சுழியிலேயே மிதக்கவிட்டான்.

மாணிக்கங்களை எடுத்தபோது, படகு சுழியில் விரைந்து சென்றது. ஒரு மாணிக்கத்தை மிதக்க விட்ட உடனே படகு