உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

79

செல்வம்,செல்வாக்கு ஆகியவற்றின் செம்மாப்பில் அன்று செம்மேனி குளித்தெழுந்தான். புதல்வியரையும், மருமகச் செல்வர்களையும் சூழ இருத்திக் கொண்டு அவன் அன்று இன்னுரையாடினான்.

விளையாட்டாக அவன் புதல்வியரிடம் ஒரு கேள்வி கேட்டான். அவர்கள் கூறும் இனிய மறுமொழி கேட்டு மகிழ அவன் எண்ணியிருந்தான்.

"கண்மணிகளே! உங்கள் வாழ்வு இன்பகரமாக இருக்கிறதா? அதை இன்பகரமாக்கியதற்கு யார் முக்கிய காரணமென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் விரும்புவது ஏதேனும் உண்டா?” என்று அவன் வினவினான்.

புதல்வியர் அவன் குறிப்பறிந்து இனிய முகமனுரைகள் வழங்கினார்கள். "எங்கள் வாழ்வு எவ்வளவோ ன்பகரமானதாக இருக்கிறது. அதற்குப் பலர் உதவினாலும் அடிப்படைக் காரணம் எங்களைப் பெற்று வளர்த்து, எங்கள் நல்வாழ்வில் ஓயாது அக்கரை கொண்டிருக்கும் எங்கள் தந்தை யாகிய தாங்களே. எங்களுக்கு இப்போதிருக்கும் ஒரே விருப்பம் நீங்கள் நீடூழி வாழவேண்டும் என்பதே!” என்றனர் அவர்கள். அவர்கள் ஆறு பேரும் பாடிய புகழ்ப்பாட்டின் பல்லவி இதுவாகவே இருந்தது. ஆனால், அவர்கள் தம்தம் கணவரை நோக்கிப் புன்னகை செய்தபடியே பேசினர்.

செங்கழுநீர் கள்ளங்கபடமற்ற கன்னியாயிருந்தாள். தமக்கையர் மேலீடான தன்னலப் புகழ்ச்சியுரையில் அவளுக்கு உவர்ப்புத் தட்டிற்று. அவள், அவர்கள் உரைத்தபடி உரைக்காமல் புதிய விடை பகர்ந்தாள் “தந்தையே! துன்பம் எப்படி இருக்கும் என்பதை நான் அறியவில்லை. ஆகவே, என்னுடைய இன்பத்தை அளவிட முடியாது. அந்த இன்பத்துக்குப் பல காரணம் இருக்கலாமானாலும், அதன் அடிப்படை என் நற்பேறு என்று தான் எண்ணுகிறேன். என் ஒரே விருப்பம் என்றும் தங்களிடம் என் நேசம் மாறாதிருக்கவேண்டும் என்பது தான்” என்றாள்.

ன்பவாழ்விலும் புகழ்ச்சிப் பசப்பிலும் ஈடுபட்ட செல்வனுக்கு, இந்த மெய்யுரை மனக்கசப்பையும், சீற்றத்தையும் உண்டு பண்ணிற்று. “ஆ, அப்படியா செய்தி! உன் நற்பேறே