உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அப்பாத்துரையம் - 35

உனக்கு இனி உதவட்டும்! அதன் ஆற்றலைப் பார்க்கிறேன்!” என்று கறுவினான்.

உறவினர் எவ்வளவு தடுத்தும் செம்மேனி கேட்கவில்லை. அவன் ஏவலரை அழைத்தான். செங்கழுநீரை ஒரு சிவிகையிலேற்றி, நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு விட் வரும்படி ஆணையிட்டான்.

தந்தையைவிட்டுப் பிரிவதற்கே செங்கழுநீர் பெரிதும் வருந்தினாள். ஆயினும், வாழ்க்கை மாற்றத்தைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. அத்துடன் அவள் செவிலித்தாய் போதணங்கு, செம்மேனியின் சீற்றங் கண்டு கசிந்துருகினாள். அவள் எவ்வளவு மன்றாடியும், செம்மேனி தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தான். அதன்பின் அவள், தன் வளர்ப்புச் செல்வியுடன் தானும் போக முனைந்தாள். செங்கழுநீரைக் கொண்டு சென்ற சிவிகையிலேயே அவளும் ஏறிச் சென்றாள்.

பணியாட்களுக்குக்கூடச் செங்கழுநீரைக் காட்டில் விட்டு வரும் போது கண்களில் நீர் ததும்பிற்று. ஆயினும், செம்மேனியின் கட்டளையை நிறைவேற்றாதிருக்க அவர்கள் துணியவில்லை. "ஆண்டவனே! எம் பிழை பொறுத்து எம் இளஞ்செல்வியைக் காத்தருள வேண்டும்" என்று அவர்கள் கடவுளை இறைஞ்சி

மீண்டனர்.

திருவுடைய செல்வியின் தனிமையும், துயரும் எண்ணிக் காட்டிலுள்ள மரஞ்செடி கொடிகள்கூடத் துடித்தன. செவிலி போதணங்கு தள்ளாத வயதுடையவள். ஆயினும் செல்வி மீதுள்ள பாசம் அவளுக்குத் தெம்பளித்தது. அவள் செல்வியுடன் காட்டில் இரவு தங்க ஒரு பாதுகாப்பான இடம் தேடினாள்.

கணைப்பேறி நெளிந்து வளைந்திருந்த ஒரு முதிய இலுப்பை மரத்தடியில் அவர்கள் ஒருங்கினார்கள். அதன் உட்பகுதி அவர்களுக் கென்று கூடாய் அமைந்திருப்பது போலத் தோன்றிற்று. அத்துடன் உட்புழை மரத்தின் வளைவு நெளிவுகளுக்கிடையே மேலும் கீழும் சுற்றிலும் வளைந்து வளைந்திருந்தது. அதன் உள்வளைவு அவர்களுக்கு வாயிலமைத்த ஒரு சிறு மாளிகை போலாயிற்று. செவிலித் தாயுடன் ஒரு செவிலித்தாயாக, அந்த இலுப்பை மரம் செல்விக்கு ஆதரவு தந்தது.