உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

81

அவர்களிடம் ஒருநாள் உணவே இருந்தது. அதை அவர்கள் உண்டனர். மரத்திற்குள்ளேயே இரவு நேரம் கழித்தனர். காட்டிலுள்ள கொடு விலங்குகள் நாற்புறமிருந்தும் வந்து மரத்தைச் சூழ்ந்தன. உள்ளிருக்கும் மனிதர் வாடையை மோப்பத்தால் அறிந்து, அவை, அதைச் சுற்றிச்சுற்றி வந்தன. அவற்றின் கூச்சல்களால் செங்கழுநீரும், போதணங்கும் நடுங் கினார்கள். மரத்தின் உட்புழையினுள் மேலும் மேலும் ஆழ்ந்து உட்சென்று பதுங்கினர். விலங்குகள் புழைவாயின் வளைவு நெளிவுகளிடையே அவர்களை எட்ட முடியவில்லை.

கரடிகள் மரத்தில் ஏறிப் பார்த்தன; புலிகளும் சிங்கங்களும் மரத்தின் புறத்தோட்டைக் கிழிக்க முயன்றன; காட்டுப் பன்றிகளும், யானைகளும் மரத்தைத் தாக்கி முறித்துவிட முயன்றன; அவற்றின் கோரத் தந்தங்கள் மரத்தின் பட்டையைக் குத்திக் கிளறி ஊறுபடுத்தின.

பொழுது விடிந்தது. கொடுவிலங்குகள் தத்தம் பதி விடங்களுக்குச் சென்று விட்டன. செங்கழுநீரும், போதணங்கும் மெல்ல வெளியே வந்து பார்த்தனர். அருமை இலுப்பை மரத்தின் புறப்பகுதி எங்கும் தாறுமாறாகக் கிழிந்து கிடந்தது.“அந்தோ! எம் உயிர்காக்க அருமை மரம் அடைந்த நிலை இதுவோ?” என்று செங்கழுநீர் உள்ளம் துடித்தது. “எனக்காக எவ்வளவு இன்னல் பட்டாய்? அன்னையே! உன் காயங்களை ஆற்றுவது என் முதல் கடன்!” என்று அவள் மரத்திடம் ஒத்துணர்வுடன் கூறினாள். பக்கத்திலிருந்த ஒரு குட்டையை அணுகி மண்ணும் நீரும் கலந்து நறுஞ்சேறு உண்டு பண்ணினாள். அதை மரமுழுதும் அப்பி அதன் நைவு ஆற்றினாள். போதணங்கும் இத்தொண்டில் தன்னால் இயன்ற பங்கு ஒத்துழைத்தாள்.

அவர்கள் நன்றியுணர்வு கண்டு மரத்தின் தெய்வமாகிய இலுப்பை மூதணங்கு மகிழ்வுற்றது. “குழந்தையே! செல்வியே! என் இடரிலிருந்து உங்களுக்கு நேரிட்ட இடரின் அளவை நீங்கள் உணரலாம். என் இடர்பற்றி எனக்குக் கவலையில்லை. உங்களுக்காகவே இன்னும் கவலைப்படுகிறேன். வயது சென்ற என் ஆதரவை நீங்கள் எத்தனை நான் நம்பியிருக்க முடியும்? நிலையான வேறு ஆதரவை நான் உங்களுக்கு விரைவில் தேடித்தர வேண்டும். அஃது என் பொறுப்பு. ஆனால்,