92
அப்பாத்துரையம் - 37
கென்ட் தலைவன், மன்னனுடைய மூத்தமகள் துன்புறுத்தத் தொடங்கியநாள் முதல் அவனது இறுதிவரைக்கும் உடன் இருந்து வந்தான்; கேயஸ் என்னும் பெயர்கொண்டு தொடர்ந்து வந்தவன் தானே என்பதை மன்னன் இறப்பதற்குமுன் அவனுக்கு அறிவிக்க முயன்றான். ஆனால், அப்போது மன்னன் மனமோ கவலையால் நொந்து நொந்து கலங்கியிருந்தது. அதனால், அஃது உண்மையாக இருக்கமுடியும் என்றும், கென்ட் தலைவனும் கேயஸ் என்பவனும் வேறு வேறானாவர் அல்லர் என்றும் அவனால் உணர முடியவில்லை. ஆகையால், அந்நிலைமையில் அதனை விளக்கிக் கூறி
அவனை
வருத்தலாகாது. லியர் மன்னன் ஆவி பிரிந்த பின்னர், அவனிடம் உண்மையாக ஊழியம் செய்து வந்த அத்தலைவனும், தன் முதுமையாலும் மன்னன் துன்பங்களுக்காகத் தான் உற்ற துயரத்தாலும் விரைவில் இறந்தான்.
கிளஸ்டர் தலைவனாக இருந்த எட்மன்ட் செய்த கொடுஞ் செயல்கள் வெளிப்பட்டன.கிளஸ்டர் தலைமைக்கு உரியவனான எட்கார் அவனுடன் தனிப்போர் புரிந்து, அவனைக் கொல்லவே, இறைமுறை அக்கொடியோனையும் கொண்டு சென்றது. கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன் ஒரு குற்றமும் அறியாதவன் அல்லனோ? கார்டெலியாவின் முடிவு பற்றி அவன் ஒன்றும் செய்ய வில்லை. லியர் மன்னனைக் கொடுமையாக நடத்துமாறு தன் மனைவியை அவன் தூண்டியதுமில்லை. லியர் மாண்டபின், அவனே பிரிட்டன் அரசுரிமை பெற்றான்.
1. King Lear
3.
Dake of Albany
5. Duke of Cornwall
1.
Duke of Burgundy.
9. Caius
11. Dover
13.
Edmund
அடிக்குறிப்புகள்
2. Goneril
4. Regan
6. Cordelia
8. Earl of Kent
10.Tom
12. Earl of Gloucester
14. Edgar