உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அப்பாத்துரையம் – 37

ஆடவர்:

உள்நாடக உறுப்பினர்கள்

1. பிரயம் : முதல் நாடகத் தலைவன் - ட்ராய் மன்னன்

2. கன்சாகோ: (இரண்டாம் நாடகம்) வியன்னா நகரமன்னன்.

3. லூஷியானஸ்: கன்சாகோ உறவினன் கொன்றபின், பப்டிஸ்டா கணவன்.

பெண்டிர்

-

அவனைக்

1. ஹெக்யூபா: (முதல் நாடகம்) பிரயம் மனைவி.

2. கன்சாகோ மனைவி: (இரண்டாம் நாடகம்) கன்சாகோ இறந்தபின் லூஷியானஸ் மனைவி.

கதைச் சுருக்கம்

டென்மார்க் அரசன் ஹாம்லெத்தின் மனைவி கெர்ட்ரூட் அரசனைக் கொன்ற அவன் தம்பி கிளாடியஸை மணந்து கொள்ள, அதுகண்டு நொந்த இளவரசன் ஹாம்லெத்து தன் கல்லூரி நண்பன் ஹொரேஷியோ வாயிலாய்த் தந்தையின் ஆவியைக் கண்டு தந்தை கொலைபற்றிய விவரம் அறிந்து பழி வாங்க எண்ணினான். அதற்கான மன உறுதியின்றிக் குழம்பிய உள்ளத்துடன் இன்னும் தெளிவு வேண்டி கிளாடியஸ் வாழ்க்கையை ஒத்த கதைப் போக்குடைய நாடகம் நடித்துக் காட்டி அரசன் குற்றத்தை நேரடியாகக் கண்டான்.

து

தன் எண்ணத்தை மறைக்கப் பித்தனாக நடித்ததினால் ஹாம்லெத் தன் காதலி ஒபீலியாவைக் கடுமையாக நடத்தினான். அவள் தந்தை பொலோனியஸ் கிளாடியஸின் மந்திரி; மகள் மீ காதலாலேயே பித்து என எண்ணி அரசியும் ஹாம்லெத்தும் பேசும் போது ஒற்றுக்கேட்டவன். அரசி அச்சமுற்றநேரம் உள்ளிருந்து கூவினான். அரசனே கூவுகிறான் என்றெண்ணிய ஹாம்லெத் திரைமறைவிலேயே அவனைக் குத்திவிட்டு உண்மையறிந்த பின் வருந்தினான்.

ஹாம்லெத்தை எப்படியாவது கொல்ல எண்ணி அவனைத் தூக்கிலிடும் படி இங்கிலாந்து அரசனுக்கெழுதி ஹாம்லெத்தைக் கப்பலில் அனுப்ப, ஹாம்லெத் கடிதங் கண்டு, கொண்டு