சேக்சுபியர் கதைகள் - 1
95
வருவோரைக் கொல்லும்படி மாற்றி எழுதிவிட்டுத் திரும்ப டென்மார்க்குக்கே வர, அங்குக் காதல் முறிவால் இறந்த ஒபீலியா இழவுச் சடங்கைக் கண்டான்.
அரசன் ஒபீலியா அண்ணன் லேயர்ட்டிஸை ஹாம்லெத்துக்கெதிராக முட்டிவாட் போரில் நஞ்சிட்ட வாளால் வெட்டத் தூண்டியதுடன், ஒருவேளை ஹாம்லெத் வெற்றி பெற்றால் கொடுக்கும்படி நஞ்சிட்ட பாலும் வைத்திருந்தான். ஹாம்லெத் வெட்டுண்ட போதிலும், அதே வாளால் லேயர்ட்டிஸையும் வெட்டினான். அவனுக்காக வைத்திருந்த பாலையும் அரசியே குடித்தாள். இருவரும் அரசன் சூதை இறக்கும் தறுவாயில் வெளிப்படுத்த ஹாம்லெத் தான் விழுமுன் அரசனையும் வீழ்த்தினான். அனைவரும் இறப்பது கண்டு தானும் இறக்க முன்வந்த ஹொரேஷியோவை உலகிற்குத் தன் வரலாறு கூறும் பொருட்டு வாழ்ந்திருக்கும்படி ஹாம்லெத் வேண்டிக் கொண்டான்.
1. தந்தையின் ஆவியைக் காணுதல்
டென்மார்க்' தேசத்தை ஹாம்லெத் என்னும் அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் திடீரென இறந்தான். அவன் இறந்து ரண்டு திங்கள் கழிவதற்குள் அவன் மனைவி கெர்ட்ரூட்3 தன் மைத்துனனாகிய கிளாடியஸ்4 என்பவனை மணந்தாள். அவள் செயலை எல்லாரும் வெறுத்தனர்; அறிவிலி என்றும், வன்னெஞ்சம் உடையவள் என்றும் அவளை வைதனர். அவள் மறுமணம் செய்துகொண்ட அந்தக் கிளாடியஸ் வடிவினாலோ பண்பினாலோ இறந்த மன்னனை ஒரு சிறிதும் ஒத்தவன் அல்லன். கண்டோரும் கேட்டோரும் வெறுக்கத் தக்கவனாக இருந்தான் அவன்.
இறந்த அரசனுக்கு ஹாம்லெத் என்ற மகன் ஒருவன் இருந்தான். அரசனைத் தொலைவித்துத் தான் பட்டம் பெறவேண்டும் என்றும், அவன் மனைவியைத் தான் மணக்க வேண்டுமென்றும் சூழ்ச்சி செய்து கிளாடியஸ் தன் தமையனைக் கொன்றிருத்தல் கூடும் என்ற ஐயமும் சிலர் உள்ளத்தில் இருந்தது.
அரசன் மனைவி செய்துகொண்ட மறுமணத்தைப் பற்றி மிகுந்த கவலைகொண்டவன் அவள்மகன் ஹாம்லெத் ஒருவனே.