உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

அப்பாத்துரையம் – 37

4.திதானியா : வன அரசி-ஓபிரான் மனைவி - மாய மலரின் மயக்கத்தில் கழுதைத்தலைப் பாட்டமின் காதலி

5. பயற்று நெற்று: வன அரசி திதானியாவின் பணியாட்கள்

6. விட்டில் பூச்சி:

கதைச்சுருக்கம்

அதேன்ஸ் நகரத்தில் அரசன் தீஸியஸிற்கும் ஹிப்பாலி தாவுக்கும் மணவினை ஏற்பாடாயிற்று. அதற்கிடையில் ஈஜியஸ் என்பவன் தான் தேர்ந்தெடுத்த மணமகனாகிய தெமத்ரியஸை மறுத்து லைஸாண்டரை மணக்க விரும்பும் தன் மகள் ஹெர்மியாவுக்கெதிராக வழக்குக் கொண்டு வந்தான். அரசன் நாலுநாள் தவணை தர, ஹெர்மியா லைஸாண்டருடன் வேறிடம் சென்று மணமுடிக்கத் தீர்மானித்தாள். இதனை அறிந்த அவள் தோழி ஹெலனா தான் காதலித்த தெமெத்ரியஸிடம் சொல்ல, அனைவரும் காட்டில் இரவில் ஒன்று கூடினர்.

காட்டில் வன அரசன் ஓபிரானுக்கும் வன அரசி திதானியாவுக்கும் ஒரு சிறு இந்தியப் பையனைக் கைக்கொள்ளும் வகையில் ஏற்பட்ட பிணக்கால் வன அரசன் தன் துணைவன் பக்கின் உதவி கொண்டு உறங்கி எழுந்தவுடன் கண்டவரைக் காதலிக்கச் செய்யும் மாயமலரைக் கொணரச் செய்தான். அப்போது பக்தீஸியஸுக்காக நாடகம் நடிக்கவந்த நாட்டுப்புறத்து மக்கள் தலைவனாம் பாட்டம் தலைமீது கழுதைத் தலையை வைத்து அதனைத் திதானியா காதலிக்கும்படி செய்தான்.

தே மாயமலரைப் பயன்படுத்தி தெமெத்ரியஸை ஹெலனா மீது காதல் கொள்ளச் செய்ய ஓபிரான் எண்ணினான். ஆனால் பக்கின் பிழையால் அது லைஸாண்டர் கண்மீது பட அவன் ஹெர்மியாவை விட்டு ஹெலனாவைப் பின்பற்றினான். பிழைகண்டு திருத்துகையிலும், தெமெத்ரியஸ் கண்ணில் மலரிட்டு அவனையும் ஹெலனா பக்கமே திருப்பினான். தோழியர் இருவரும் இந்நிலையைத் தாமே அறியாமல் பூசலிட்டனர். ஓபிரான் இறுதியில் தெளிவு பெற்று அனைவரையும் உறங்கவைத்து லைஸாண்டர் கண்ணில் மாற்று மலரிட்டான். இதே சமயம் கழுதைத் தலையனுடன் அளவளாவும் திதானியா