உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2 2

119

விடமிருந்து இந்தியப் பையனை அடைந்தபின் அவள் கண்களிலும் ஓபிரான் மாற்று மலரிட்டான்.

விழித்தெழுமுன் தீஸியஸும் பிறரும் வேட்டையாட வந்து காதலர் மனமாற்றங் கண்டு, வியப்பும் மகிழ்ச்சியும் பெற்றனர், அரசன் மணத்துடன் காதலர் மணங்களும் சிறக்க நடந்தேறின. மண இரவில் வன தெய்வங்கள் மணப் படுக்கைகளைச் சுற்றி வாழ்த்துப் பாடின.

1. காதலுக்காகக் கானக மேகுதல்

அதேன்ஸ்' நகரத்தில் ஒரு புதுமையான சட்டம் உண்டு. அதன்படி ஒரு பெண் தன் தந்தை கருத்துக்கிசைந்த கணவனை ஏற்க மறுத்தால் அவள் கொலைத் தீர்ப்புக்கு உரியவள் ஆகவேண்டும். ஆயினும், பொதுவாக எவரும் தாம் பெற்ற புதல்வியரை இழக்க விரும்பாததால் இயற்கைக்கு மாறான இச்சட்டம் நடைமுறையில் வழங்காமலே இருந்தது

ஆயினும், ஒரு தடவை மட்டும் ஈஜியஸ்' என்பவன் இச்சட்டத்தின் பெயரால் தன் புதல்வியாகிய ஹெர்மியா’மீது அதேன்ஸ் அரசராகிய தீஸியஸ்' முன்பாக வழக்குத்தொடுத்தான். உயர் குடியிற் பிறந்த தெமத்ரியஸ் என்னும் இளைஞனுக்கு அவளை மணம் செய்விக்க வேண்டுமென்று ஈஜியஸ் விரும்பினான். ஆனால், அவள் லைஸாண்டர்" என்ற வேறோர் இளைஞனையே மணஞ் செய்துகொள்ள விரும்பியதனால் தந்தையின் ஆணைப்படி நடக்க மறுத்தாள். இக்குற்றத்திற்காகச் சட்டப்படி அவளைத் தண்டிக்க வேண்டும் என்று ஈஜியஸ் வேண்டிக்கொண்டான்.

ஹெர்மியா இதற்கு எதிராக, 'தெமத்ரியஸ் என்பவன், முன் ஹெலனா' என்ற பெண்ணைக் காதலித்திருந்தான். அந்த ஹெலனா இன்னும் அவனையே எண்ணி எண்ணி வாடுகின்றனள். தெமத்ரியஸ் அவளை மணந்து கொள்ளா விட்டால் அவள் வீணே உயிரிழக்க நேரிடும்' என்று வழக்காடினாள்.

தீஸியஸ் பெருந்தன்மையும் அருளும் உடைய அரசர். ய ஆயினும், அவர் அதேன்ஸின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவரா யிருந்தார். எனவே, அவர் இவ்வகையில் நன்காராய்ந்து ஒரு