உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ||__

அப்பாத்துரையம் – 37

முடிவுக்கு வர ஹெர்மியாவுக்கு நான்கு நாட்கள் தவணை கொடுத்தார். 'அத்தவணைக்குள் தந்தையின் விருப்பப்படி நடப்பதாக ஒப்புக் கொள்ளாவிட்டால் உன்னை நான் கொலைத் தீர்ப்புக்கு ஆளாக்க வேண்டி வரும்' என்று அவர் அவளிடம் கூறினார்.

ஹெர்மியா,தீஸியஸின் வழக்கு மன்றத்தினின்று நேராகத் தன் காதலனாகிய லைஸாண்டரிடம் சென்று சென்று தமது க்கட்டான நிலைமையை எடுத்துக் கூறினாள்.

இது கேட்டு லைஸாண்டர் மிகவும் மனம் உடைந்தான். பின் அவன் ஒருவாறு தேறி ‘அதேன்ஸினின்றும் சிறிது தொலைவில் எனக்குச் சிற்றன்னை ஒருத்தி இருக்கிறாள். அவள் உறைவிடம் நகர் எல்லைக்கு வெளியில் உள்ளது. இக்கொடிய அதேனியச் சட்டத்தின் ஆட்சி அவ்விடத்தில் செல்லாது. ஆதலால், இன்றிரவே அவ்விடத்துக்கு இருவரும் சென்று மணம் புரிந்துகொள்வோம்' என்றான். ஹெர்மியாவும் அதற்கிணங் கினாள். "வேனிற் காலத்தில் நாம் இருவரும் களிப்புடன் நகர்ப்புறத்துக் காட்டில் உலவுவதுண்டன்றோ? அதே இடத்தில் இன்றிரவு நான் உன்னுடன் வந்து சேர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சி தரும் இச்செய்தியை ஹெர்மியா தன் தோழி ஹெலனாவுக்கு மட்டிலுமாவது சொல்லாதிருக்க முடியவில்லை. காதலர் கண்ணற்றவர் என்ற கருத்திற்கிணங்க, ஹெலனா அதனைத் தெமத்ரியஸுக்கு உரைத்தாள். தன் தோழிக்குத் தீங்கு இழைக்கவேண்டும் என்பது அவள் கருத்தன்று. ஆயினும், தானும் தன் காதலனைத் தொடர்ந்து காட்டிற்கே போகலாம் என்ற ஆர்வம் இச்செயலைச் செய்யும்படி அவளைத் தூண்டிற்று.

2. வன அரசன் காதற் பிணக்கு

8

லைசாண்டரும் ஹெர்மியாவும் வந்து சேர எண்ணிய காடு, குற்றுரு உடைய வனதெய்வங்களின் நடமாட்டத்துக்குரிய இடமாக இருந்தது.

அத்தெய்வங்களின் அரசன் ஓபிரான் அரசி திதானியா" அவ்விருவரும் அவர்கள் குழாங்களும் அக்காட்டிடையே தங்கள் நள்ளிரவு விழாவைக் கொண்டாட வந்திருந்தனர்.