உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

3. பஸானியோ போர்ஷியா திருமணம்

6

11

பஸானியோ தன் நண்பனுடைய அருஞ்செயலை வியந்து போற்றி, பணத்தைப் பெற்றுக்கொண்டு, போர்ஷியாவை மணப்பதற்கு வேண்டிய முயற்சிகளைத் தொடங்கினான். அவள் வாழ்ந்த இடம் பெல்மாண்ட் என்னும் நகரம். அவள் அழகிலும் அறிவிலும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவள். ஆகையால், ளைஞர் பலர் அவளை மணக்க ஆவல்கொண்டு பெல்மாண்ட் நகரத்துக்கு வந்து வந்து போயினர். ஆனால் மணம் செய்து கொள்ளுவதில், போர்ஷியா தன் தந்தையாரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றக் கடமைப் பட்டிருந்தாள். அவர், பொன் பெட்டி ஒன்று, வெள்ளிப் பெட்டி ஒன்று, ஈயப்பெட்டி ஒன்று ஆக மூன்று செய்து, ஒவ்வொன்றையும் மூடிப் பூட்டிச் சாவியை வைத்திருந்தார். இந்த மூன்றனுள் ஒன்றில் போர்ஷியாவின் படம் இருந்தது. அப்படம் அடங்கிய பெட்டியைத் திறப்பவனே போர்ஷியாவை மணப்பதற்கு உரியவன் என்பது அவருடைய ஏற்பாடு. ஒவ்வொரு பெட்டியின் மேலும் ஒவ்வொரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் உலகத்தில் எல்லோரும் விரும்புவதைப் பெறுவான்," என்பது பொன்பெட்டியின் மீது வரையப் பட்டிருந்தது.“என்னை விரும்புவோன் தன் திறமைக்கேற்றதைப் பெறுவான்" என்பது வெள்ளிப் பெட்டியின்

மேலே

மீது

வரையப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் எல்லாம் இழத்தல் வேண்டும்," என்பது ஈயப் பெட்டியின் மீது பொறிக்கப் பட்டிருந்தது. அரசிளங்குமரரும் செல்வமிக்க வருமாகிய சிலர் வெள்ளிப் பெட்டியையும் பொன் பெட்டியையும் திறந்து பார்த்து, வெட்கமுற்றுச் சென்றனர்.

பஸானியோ போர்ஷியாவுக்கு நன்றாகத் தெரிந்தவன். அவனை மணப்பதற்கு அவளும் விரும்பினாள். ஆனால், தந்தையின் கட்டளையை கட்டளையை மீற அவள் எண்ணவில்லை. பஸானியோ தன் நண்பனாகிய கிராஷியானோ' என்பவனோடு ஆடம்பரமாகப் புறப்பட்டுப் பெல்மாண்ட் வந்து சேர்ந்தபோது, தந்தை ஏற்பாட்டையும் தன் உள்ளக்கருத்தையும் எடுத்துரைத்தாள். "ஐயோ, நான் உன்னைப் பெற முடியாமல் போனால் நான் எப்படி உயிர் வாழ்வேன்? உன்னுடைய படம்