உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

12 ||- எந்தப் பெட்டியில் உள்ளதோ? நான் எப்படி அறிவேன்?" என்று அவன் வருந்தினான். போர்ஷியா அவனைத் தேற்றினாள். உண்மை என்றும் உயர்வே தரும்" என்று உரைத்துப்

பெட்டிகளின் அருகே அழைத்துச் சென்றாள்.

அவற்றைக் கண்டவுடன் பஸானியோ திகைத்தான். அப்போது, போர்ஷியா தன் மெல்லிய குரலால் பாடி அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் பொன் பெட்டியைக் கண்டு, “இது வெளித்தோற்றம்; இதனால் நான் மயங்கேன்; என்று சொல்லி, வெள்ளிப் பெட்டியை நோக்கினான். வெள்ளியும் வேண்டாம் என எள்ளி அப்பாற்சென்று, ஈயப்பெட்டியைத் திறந்தான்; திறந்ததும் உவகைக் கடலில் மூழ்கினான். அதில் இருந்த போர்ஷியாவின் அழகிய படம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போர்ஷியாவும் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்; தன் விருப்பத்திற் கேற்றவாறு முடிந்ததை நினைத்து நினைத்து களித்தாள்.

"மங்கையர்க்கரசியே! நான் பெருஞ்செல்வனும் அல்லன்; வேறு சிறப்பு உடையவனும் அல்லன்.என் குடிபிறப்பு ஒன்றுதான் எனக்குள்ள தகுதி, என்று பஸானியோ கூறினான். இதைக்கேட்ட போர்ஷியா, "என் தலைவரே! உமது அன்பே நான் பெற விரும்பும் செல்வம், அதைவிட உயர்ந்த செல்வம் உண்டோ? நான் ஒன்றும் அறியேன். என்னுடையவை எல்லாம் இன்றுமுதல் உம்முடையவையே," என்று சொல்லித் தன் கையிலிருந்த கணையாழியைச் சுழற்றி அவனிடம் கொடுத்தாள். அவளுடைய அடக்கத்தை அறிந்த பஸானியோ, மிக வியந்து அவளைப் புகழ்ந்தான். “உன்னையும் கணையாழியையும் நான் என்றும் விட்டுப் பிரியேன்,” என்று சூளுரைத்தான்.

8

போர்ஷியாவுக்கு நெரிஸா என்ற தோழி ஒருத்தி இருந்தாள். அவளை மணக்க கிராஷியானோ விரும்பினான். அவளும் அதற்கு சைந்திருந்தாள். பஸானியோ வெற்றி பெற்றவுடன், கிராஷியானோ அவனையும் போர்ஷியாவையும் வாழ்த்திவிட்டுத் தனக்கும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டான்

அதனைக்கேட்டபஸானியோ, தகுந்த மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியோடு அவ்வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக்