உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

13

கூறினான். நெரிஸா தன்னை மணக்க சைந்திருப்பதைக் கிராஷியானோ எடுத்துரைத்தான். போர்ஷியா நெரிஸாவை வினவி, அவள் கருத்தை அறிந்து மகிழ்ந்தாள்.

இங்ஙனமாக, எல்லோரும் பெருமகிழ்ச்சியோடு இருந்த போது, அந்தோனியோவிடமிருந்து ஒருவன் கடிதம் கொண்டு வந்தான். பஸானியோ அக்கடிதத்தை வாங்கிப் படித்தபோது, அவன் முகக் குறியைக் கண்டு போர்ஷியா வருந்தினாள். அதைப் பற்றி அவனைக் கேட்டாள். “எனது வருத்தத்தை நான் எவ்வாறு கூறுவேன்? எனது குடியிருப்பு ஒன்றே எனக்குள்ள தகுதி என்பதை முன்பே கூறியுள்ளேன். ஆனால், நான் கடன்காரன் என்பதை அப்போது கூறத் தவறிவிட்டேன். என் பொருட்டாக என் ஆருயிர் நண்பன் அந்தோனியோ மூவாயிரம் பொன் கடன் பட்டிருக்கிறான். கடன் கொடுத்தவன் ஷைலாக் என்னும் கொடியோன் ஒருவன். 'கெடுநாள் கடந்தால் ஓர் இராத்தல் தசை அறுத்துக் கொள்ளலாம் என்று அவனிடம் என் நண்பன் எழுதிக்கொடுத்தான். அந்தப் பாவி ஷைலாக் இனி என்ன செய்வானோ?" என்று பஸானியோ சொல்லிக் கண்ணீர் விட்டான். போர்ஷியா இதை அறிந்து மனம் உருகினாள். "இதுவரைக்கும் இவ்வளவு உயர்ந்த நண்பரைக் குறித்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. இத்தகைய நண்பருக்கும் துன்பம் வந்ததா? என்ன கொடுமை, ஆ! என்ன கொடுமை!” என்று சொல்லி அக்கடிதத்தைப் படிக்குமாறு வேண்டினாள்.

“ஆருயிர்த் தோழ!

என் கப்பல்கள் கடலில் கவிழ்ந்து அழிந்தன. யூதனிடம் கடன்பெற்ற கெடுநாள் தவறியது. அவன் என்னை அறுத்தல் இறுதி.நான் இறப்பதற்கு முன் உன்னைக் காண விழைகின்றேன். ஆனால், உன் விருப்பம்போல் செய்க. அன்பு காரணமாக வருக. இக்கடிதம் காரணமாக வரல் வேண்டாம்," என்பதே அக்கடிதம் ஆகும்.

"அன்பரே! இனி ஒரு நொடிப்பொழுதும் வீணாதல் கூடாது. நண்பருடைய உடலிலிருந்து ஒரு தூசும் எடுக்க இடந்தரலாகாது. நான் முன்பே கூறியுள்ளபடி என் செல்வமெல்லாம் உம்முடைய செல்வம். கடன் தொகையைவிட