உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

"மாண்புமிக்க முறைமன்றத் தலைவர் அவர்களுக்கு,

என்

15

உடல்நலம் குன்றியுள்ளது. ஆதலின், தங்கள் கட்டளைப்படி அந்தோனியோ வழக்கை எடுத்துரைக்க நான் வரமுடியவில்லை; மன்னிக்க வேண்டுகிறேன். எனக்குப் பதிலாக அறிவும் ஆற்றலும் வாய்ந்த பல்தசார் அவ்வழக்கை எடுத்துரைப் பார். அதற்குத் தாங்கள் இசைந்தருளக் கோருகின்றேன்."

இதுவே அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசன் அதைப் படித்த உடனே அதில் குறித்திருந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். "இவர்தாம் அந்தோனியோவின் பொருட்டு வந்துள்ள வழக்கறிஞர். அவர் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர் என்று வழக்கறிஞர் பெல்லாரியோ புகழ்கிறார்,” என்று கூறி, அங்கிருந்த சான்றோர்க்கு வழக்கறிஞர் பல்தசாரை (உருமாறி வந்த போர்ஷியாவை) அறிமுகப்படுத்தினான்.

போர்ஷியா தனக்களித்த இருக்கையில் அமர்ந்து சுற்றிப் பார்த்தாள்; யூதனையும், தன் கணவனையும் கண்டாள். பஸானியோ தன் மனைவியை அறிந்து கொள்ளவில்லை. மிகுந்த கவலையோடும் நடுக்கத்தோடும் அவன் அந்தோனியோவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருத்தலைப் போர்ஷியா அறிந்தாள்.

எடுத்துக்கொண்ட

முயற்சிக்கு ஏற்ற

உறுதியும் அஞ்சாமையும் போர்ஷியாவிடம் இருந்தன. அவள் அமைதியாக வழக்கை எடுத்துரைக்கத் தொடங்கினாள். முதலில் ஷைலாக்கைப் பார்த்து, "ஐயா! நீ கொடுத்த வழக்கு வெனிஸ் அரசியலார் சட்டப்படி பொருத்தமாக உள்ளது. அந்தோனியோவின் உடம்பின் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசை பெறுவதற்கு உனக்கு உரிமை உண்டு," என்று கூறினாள். இதனைக் கேட்டதும், ஷைலாக் உள்ளம் குளிர்ந்தது. வழக்கறிஞர் வயதால் இளைஞராயினும் அறிவால் முதியவர் என்று போற்றினான்.போர்ஷியா தொடர்ந்து பேசினாள்: “ஆனாலும், இரக்கம் என்பது உயிரின் சிறந்த பண்பு அன்றோ? ஓர் உயிர்க்கும் துன்பம் செய்யாது வாழ்தலே உயர்ந்த வாழ்வு அன்றோ? ஆதலால் நீ எண்ணிப் பார்த்தல் வேண்டும். நீ கேட்டதைப் பெற உனக்கு உரிமை உண்டு. சட்டம் அதற்கு இடம் தருகிறது. ஆனாலும், கடவுளிடத்தில் இரக்கம் எதிர்பார்க்கின்ற நாம்